[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 12:26.02 PM GMT ]
குறித்த ஆசிரியர் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவிக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கை உட்பட்ட நாடுகளில் காணாமல் போனோர் தொடர்பில் புதிய மற்றும் எஞ்சியுள்ள முறைப்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த மாணவி இவ்விடயம் தொடர்பில் பெற்றோரிடம் முறையிட்டமையை அடுத்து, பெற்றோர் பாடசாலை நிர்வாகத்தினரிடம் இதனைத் தெரியப்படுத்தியுள்ளார்.
நிர்வாகத்தினர் தவறுதலாக நடந்த விடயம் எனவும் இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறி சமாதானப் படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இதன் பின்னரும் தொடர்ச்சியாக வேறு சிம் காட்டில் இருந்து குறிதத் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தியை அனுப்பி வைத்துள்ளார் அந்த ஆசிரியர்.
ஆசிரியரின் நடவடிக்கையினைப் பெறுக்க முடியாத மாணவியின் பெற்றோர், யாழ்.பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறையிட்டுள்ளனர்.
இந்த முறைப்பாட்டை அடுத்து குறித்த ஆசிரியர் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை உட்பட்ட நாடுகளின் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆரம்பம்
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 12:14.06 PM GMT ]
நியூயோர்க்கில் கூடிய ஐக்கிய நாடுகளின் பலவந்த நிலையிலான காணாமல் போதல் தொடர்பான குழு, கடந்த 6 மாதங்களில் முறைப்பாடு செய்யப்பட்ட இலங்கை, பாகிஸ்தான் உட்பட்ட 25 நாடுகளின் காணாமல் போன 400 சம்பவங்கள் குறித்து ஆராய்ந்தது.
இதனையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பலவந்த நிலையில் காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு தலைவர் பிரான்ஸை சேர்ந்த ஒலிவர் டி பரோவலி, தமது குழு காணாமல் போனோரின் உறவினர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று பரோவலி தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten