தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 juli 2013

13வது திருத்தச்சட்டத்தை மாற்றும் நடவடிக்கை தொடரும்: அரசாங்கம்!

அரசியல் நிலைப்பாட்டோடு இலக்கியம் அமைதல் வேண்டும்: 41வது இலக்கிய சந்திப்பில் கருத்துரை
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 03:18.38 PM GMT ]
பெண்கள் அடக்கு முறையில் இருந்து விடுபட்டு சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதற்கான நல்வழிகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இலக்கியங்களை எழுதியுள்ளேன் நல்லூர், யுரோவில் மண்டபத்தில் நடைபெற்ற 41வது இலக்கியச் சந்திப்பில் திருமதி அஷ்றபா நூர்தீன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இலக்கியம் சம்பந்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு நான் ஏன் எழுதுகிறேன் என்னும் தலைப்பில் பேசிய புதிய கவிஞருமான, எழுத்தாளருமான திருமதி அஷ்றபா நூர்தீன் தெரிவித்தார்.
கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் கருத்தரங்கு நிகழ்வு இடம்பெற்றது. புலம்பெயர் இலக்கியக் குழுவால் சர்வதேச மட்டத்தில் வருடா வருடம் நடத்தப்படும் இலக்கியச் சந்திப்பு இந்த முறை இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் ஜீலை 21, 22 ஆகிய தினங்களில் நிகழ்ந்து சிறப்புற முடிவுற்றுள்ளது.
திருதி அஷ்றபா நூர்தீன் தொடர்ந்தும் பேசுகையில், எனது எழுத்துக்கள் முஸ்லிம்களை அவரது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றியமை மற்றும் பெண்களின் பாலியல் துன்புறுத்தல் சிறுவர் துஷ்பிரயோகம், சீதனக் கொடுமை, பெண்களைக் கொத்தடிமைகளாக நடத்ததல் போன்ற இன்னோரன்ன அடக்கு ஒடுக்கு முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளன என்பனவாகும். நெம்பு கோலாக இலக்கியத்தைக் கை எடுத்துள்ளேன். இவ்விதம் அவர் கூறினார்.
மல்லிகைப்பூ சந்தி திலகர் பேசுகையில் கூறியதாவது,
புலம்பெயர் இலக்கிய முன்னோடிகளாக மலையகப் படைப்பாளிகள் காணப்படுகிறார்கள். மலயக இலக்கியத்தின் தோற்றுவாய் கவிதையாக அமைந்திருக்க வேண்டும். கூலித்தொழிலாலிகளாகக் கொண்டு வரப்படவர்களின் கைகளில் வேறெதைத்தான் கொண்டு வர முடிந்திருக்கும், வாய்மொழிப் பாடல்களாக எடுத்துவரப்பட்டவை கவிதை களாக உருவாகின. அப்துல் காதர் புலவரே மலையகக் கவிதை முன்னோடியாகக் கணிக்கப்படுகிறார் என்றார்.
இலக்கியம் என்றால் என்ன? என்னும் தலைப்பில் கருத்துரைத்த இளம் எழுத்தாளர் ரிஷாம் குரானா தெரிவித்ததாவது- இலக்கியம் ஒரு கோட்பாட்டில் என்றில்லாமல் எடுப்பார் கைப்பிள்ளையாக பல்வேறு சிந்தனைகளையும் வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன.
எனினும் இலக்கியம் ஒரு அரசியல் நிலைப்பாட்டோடு அமைதல் வேண்டும். அத்தகைய இலக்கியங்களே தலைசிறந்தவையாக அமையும் என்றார்.

13வது திருத்தச்சட்டத்தை மாற்றும் நடவடிக்கை தொடரும்: அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 01:33.44 PM GMT ]
திட்டமிட்டப்படி 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை மாற்றம் செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இன்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய- இலங்கை உடன்படிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 13வது அரசியல்அமைப்பின் கீழ் சில விடயங்கள், திணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் நினைப்பது போல 13வது அரசியல் அமைப்பு முழுமையாக அகற்றப்படாது. அதன் சில பகுதிகளே மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
13வது அரசியல் அமைப்பில் மாற்றங்களை செய்யாதுபோனால் அதனைக் கொண்டு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடரும் என்று அவர் எதிர்வுக்கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கேஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten