யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 350 மில்.ரூபாய் செலவில் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு - 64வது ஆண்டு நிறைவு விழா
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 11:24.29 AM GMT ]
இருதயக்கூறு, இருதய சத்திரசிகிச்சைப் பிரிவுகளை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், இந்தநிலையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அரசசாரா நிறுவனம் ஒன்று 350 மில்லியன் ரூபா பணத்தை வழங்க முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த பிரிவு தற்போது விடுதியிலுள்ள நோயாளர்களுக்கு உணவு தயாரிக்கப்படும் சமையலறைக் கட்டடத் தொகுதி அகற்றப்பட்டு அந்த இடத்தில் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், வைத்தியசாலையில் தற்போது இதய சத்திரசிகிச்சைப் பிரிவு மாத்திரமே இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
யாழ்.அரியாலை சனசமூக நிலையத்தின் 64 ஆவது ஆண்டு நிறைவு விழா
யாழ்ப்பாணம் அரியாலை சனசமூக நிலையத்தின் 64 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட இல்ல மெய்வன்மைப் போட்டியானது இன்று நடைபெற்றது.
யாழ்.அரியாலை சனசமூக நிலைய விளையாட்டு மைதானத்தில் எஸ்.ரி.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக உடற்கல்விப் போதனாசிரியர் செல்வி சுரேந்தினி சிதம்பரநாதன் கலந்து கொண்டார்.
இல்ல மெய்வன்மைப் போட்டியில் 12, 15, 17, 19 வயதின் கீழ் ஆண், பெண் இருபாலாருக்குமான 100 மீற்றர் ஓட்டம், 4 தர நூறு மீற்றர் அஞ்சல் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், மற்றும் கலப்பு அஞ்சல் ஓட்டம் ஆகியன நடைபெற்றன.
அத்துடன் சங்கீதக் கதிரை, விநோத உடைப் போட்டி, பெண்கள் வேகநடை, கயிறு இழுத்தல் உட்பட பல போட்டிகள் நடைபெற்றன.
இதில் சுந்தரலிங்கம் இல்லம் 694 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், பாலசுந்தரலிங்கம் இல்லம் 667 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தல்: யாழில் அரசுக்கு ஆதரவு தேடும் இராணுவத்தினர்- வடக்கு தேர்தலில் ஈபிடிபியின் சார்பில் 9 பேர் போட்டி
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 11:59.59 AM GMT ]
யாழ்.குடாநாட்டில் வடமாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து அரசு பல அபிவிருத்தித் திட்டங்களை செய்து வருவதோடு விதி அபிவிருத்தி, புனரமைப்பு, புதிய அரச கட்டிடத்திறப்பு விழா என பல அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளது.
அத்தோடு யாழ்.நகரப் பகுதியில் வீடு வீடாக இராணுவத்தினர் சென்று குடும்ப விபரங்களைக் கேட்டு வருவதோடு மக்களை அரசுக்கு வாக்கு அளிக்குமாறு கூறிவருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அரசுடன் இயங்கும் பங்காளிக் கட்சியான ஈபிடிபி கட்சியினர் யாழ்.மக்களுக்கு தங்கள் அரசியல் கொள்ளை விளக்கங்களை இலவச பிரதிகளாக வெளியீடு செய்து அளித்து வருகின்றனர்.
தென்பகுதி அரசியல் கட்சியினர் குறிப்பாக தமிழ் மக்களின் வாக்கு வங்கியை உடைப்பதற்காக மக்கள் செல்வாக்கில் உள்ளவர்களை ஒன்றிணைத்து அவர்களை வேட்பாளர்களாக்க முயன்றுள்ளதுடன் தேடிப்பிடிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்.முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக முஸ்லிம் அரசியல் கட்சியினர் கிழக்கு மாகாணங்களில் தங்கியிருந்த முஸ்லிம் மக்கள் யாழ்.ஜந்து சந்தி, சோநகர் தெரு, நாவாந்துறை பொம்மை வெளிப்பகுதிகளில் குடியேறி வருகின்றனர்.
வடமாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழ் கட்சியினர் ஒன்றினைந்துள்ள இவ்வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்னமும் தேர்த்ல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதுடன் வேட்பாளர் தெரிவில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றனர்.
தேர்தல் களத்தில் பல அரசியல் கட்சிகள் குதித்துள்ள இவ்வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பபின் முடிவுக்காகவும் அவர்களின் பிரசார நடவடிக்கைகளை தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக வடபுல அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
வடக்கு தேர்தலில் ஈபிடிபியின் சார்பில் 9 பேர் போட்டி
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோழமைக் கட்சியான ஈபிடிபிக்கு 10 வேட்பாளர்களை போட்டியில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தமுள்ள 19 வேட்பாளர்களில் 10 வேட்பாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவின் தலைமையில் ஈபிடிபியின் சார்பில் போட்டியிடவுள்ளனர்.
7 வேட்பாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பிலும் இரண்டு பேர் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் போட்டியிடவுள்ளனர்.
இந்தநிலையில் வடமாகாணத்துக்கான முதலமைச்சர் வேட்பாளர் எதிர்வரும் 25 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten