[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 11:05.58 AM GMT ]
கல்முனையில் உள்ள இரண்டு பிரதேச செயலகங்கள் இடையில் ஏற்பட்டுள்ள நிர்வாக ரீதியான சிக்கல் நிலைமை பற்றி ஆராய்வதற்காக அவசரமாக மேற்கொண்ட கண்காணிப்பு பயணத்தின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் தனது விஜயத்தின் போது, பிரதேசத்தை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள், கல்முனை பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நகர சபை எல்லைக்குள் கல்முனை தெற்கு, கல்முனை வடக்கு என இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளன.
ஒரு பிரதேச செயலகம், தமிழ் மக்களுக்கு அதிகமான முக்கியத்துவத்தை கொடுப்பதுடன் முஸ்லிம் மக்களுக்கு போதிய பணிகளை மேற்கொள்வதில்லை.
மற்றைய பிரதேச செயலகம், முஸ்லிம் மக்களை அதிகமாகவும் தமிழ் மக்களுக்கு போதிய சேவைகளை வழங்குவதில்லை என்பதால், பிரதேசத்தில் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் செனவிரட்ன,
தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதற்காகவே அரச அலுவலகங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் மக்களிடம் இருந்து பெறும் பணத்தில் இந்த அலுவலகங்கள் இயங்குவதாகவும் இதனால் ஒரு இனத்திற்காக தனியான அலுவலங்களை வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பயண எச்சரிக்கை தொடர்பில் பிரி. உயர்ஸ்தானிகரிடம் இலங்கை விளக்கம் கோரியுள்ளது
[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 11:04.24 AM GMT ]
இதுபற்றிய விளக்கம் கோரிய கடிதம் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்துக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கைக்கு வரும் பிரித்தானிய பிரஜைகள், நாட்டில் இடம்பெறும் வன்முறைகள், ஆட்கடத்தல்கள், பெண்கள் மீதான வன்முறைகள் போன்றவை தொடர்பில் கவனமாக செயற்பட வேண்டும் என்று பிரித்தானிய அறிவுறுத்தலில் கோரப்பட்டிருந்தது.
இது தொடர்பில் தாம் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்திடம் விளக்கம் கோரியுள்ளதாகவும், பதில் கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே அமரிக்காவும் இலங்கை தொடர்பில் பயண எச்சரிக்கையை விடுத்திருந்தமையும் அது தொடர்பாக இலங்கை அமெரி்க்க உயர்ஸ்தானிகராலயத்திடம் விளக்கம் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten