[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 10:14.40 AM GMT ]
கோப் குழு எனப்படும் நாடாளுமன்ற பொது வர்த்தக மத்திய குழுவின் அறிக்கை எதிர்வரும் ஜுலை 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டின் நடவடிக்கைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த அறிக்கையே இவ்வாறு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரக அதிகாரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
கோப் குழுவினால் இந்தமுறை 256 நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 110 நிறுவனங்கள் தொடர்பில் இறுதி அறிக்கை முடிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அரச நிறுவனங்களுள் மின்சார சபை, சிறிலங்கன் விமான சேவை, மிஹின் லங்கா விமான சேவை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, சமுர்த்தி அதிகார சபை மற்றும் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
கோப் குழு தமது அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் எதிர்வரும் 9 ஆம் திகதி கூடவுள்ளதாக குழு உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கத் தூதரக அதிகாரிக்கும் ஐ.தே.க. செயலாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தை
[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 10:14.28 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கும், அமெரிக்கத் தூதரக அதிகாரி மைக்கல் ஹோனிஸ்டியனிற்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
13ம் திருத்தச் சட்டம் நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten