[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 04:00.17 PM GMT ]
டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய முயற்சி மேற்கொண்டதாக செல்வகுமாரி சத்தியசீலி என்ற பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நாட்டின் நல்லாட்சி முழுமையாக சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளப் போவதாக சந்தேக நபர், சட்டத்தரணி ஊடாக கொழும்பு உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
2004ம் ஆண்டில் அமைச்சர் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மற்றுமொரு நபரும் உயிரிழந்தனர்.
குறித்த பெண் தமது கட்சி ஆதரவாளர் எனவும் அவருக்கு தண்டனை விதிக்கக் கூடாது என்பதே தமது தனிப்பட்ட கருத்து எனவும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்திருந்தார். எனினும், நீதிமன்றின் தீர்ப்புக்களில் தலையீடு செய்யப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நாட்டில் பெளத்த பிக்குகள் வெள்ளை வேனில் கடத்தும் அபாயம் காணப்படுகிறது: ரணில்
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 04:05.36 PM GMT ]
பொலிஸ் மற்றும் அரச சேவை முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
பௌத்த மதத்தை பற்றி நூல் எழுதுவது கூட குற்றச் செயலாக்கப்பட்டுள்ளது.
மாநாயக்கத் தேரர்கள் உள்ளிட்ட பௌத்த பிக்குகளை தூற்றுகின்றார்கள் என்ற ஏனைய மதத்தவர்களை இந்த ஏகாதிபத்திய அரசாங்கம் எவ்வாறு கவனிக்கும் என்பதனை சொல்ல வேண்டியதில்லை.
பௌத்த மதத்தைப் பற்றி பௌத்த பிக்குகள் நூல் எழுதினாலும் வெள்ளை வானில் கடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.
பௌத்த மதம் பற்றி நான் எழுதிய நூல் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தினால், அவர்களுக்கு பொலிஸார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை தெளிவுபடுத்தி அனுப்பி வைப்பேன் என ரணில் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் வைத்து அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten