[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 07:11.07 AM GMT ]
மத்திய பிரதேச மாநிலம் வரை போய் ராஜபக்சே வருகையை எதிர்த்து போராடிய துணிவும், நெஞ்சுரமும் மதிமுகவுக்கு மட்டும்தான் உண்டு.
ஈழம் உருவாக பொதுவாக்கெடுப்பு தான் தீர்வு என முதலில் குரல் கொடுத்தது மதிமுக தான்.
ஈழம் உருவாக பொதுவாக்கெடுப்பு தான் தீர்வு என முதலில் குரல் கொடுத்தது மதிமுக தான்.
விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கின்றேன், நாளையும் ஆதரிப்பேன் என நீதிமனறத்தில் தைரியமாக வாக்குமூலம் கொடுத்துள்ளேன்’’என்று தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று இலங்கையில் மக்கள் புரட்சி வெடிக்கும்!: ஜோன் அமரதுங்க எச்சரிக்கை
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 07:05.17 AM GMT ]
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் உழைக்கும் வர்க்கத்தினரின் ஊதியம் 15,000 ரூபாவினால் அதிகரிக்கப்படாவிட்டால், மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று மக்கள் புரட்சி வெடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊழியர் சங்கத் தலைவரும் ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன் அமரதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இ.போ.ச. ஊழியர்களின் ஊதியத்திலிருந்து சேமலாப நிதிக்கு கழிக்கப்படும் தொகை இதுவரையில் இந்த நிதியத்தில் வைப்பிடப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ராஜகிரியவிலுள்ள தேசிய பெருந்தோட்ட ஊழியர் சங்க மண்டப கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
புகையிரத சேவை ஊழியர்கள் மற்றும் தனியார் பஸ்போக்குவரத்துச் சங்க ஊழியர்கள் என கடந்த வாரத்தில் தமது உரிமைகளுக்காக தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், இப்போராட்டங்களை அவர்களால் தொடர முடியவில்லை. அரசாங்கத்தின் அச்சுறுத்தல், அழுத்தம் காரணமாக தொழிற்சங்கப் போராட்டங்களை கைவிட்டனர்.
அதன் பின்னர் அவ் ஊழியர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படவில்லை. இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்று சந்திரிகாவின் ஆட்சியில் தொழில் அமைச்சராக இருந்தபோது தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்.
தொழிலாளர் பிரகடனத்தை கொண்டு வந்தார். ஆனால், அதனை நிறைவேற்ற முடியாமல் போனது.
அதேபோன்று மஹிந்த சிந்தனையிலும் உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதாக உறுதியளித்தார். ஆனால், இன்று பதவி வந்ததும் அனைத்தையும் மறந்துவிட்டார்.
ஊழியர்களின் போராட்டங்களுக்கு எதிராக அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது. உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் விடுக்கப்படுகின்றன. இந்நிலை தொடருமானால் எதிர்காலத்தில் மாபெரும் தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten