தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 juli 2013

அதிகாரங்களுடன் கூடிய 13வது திருத்தச் சட்டம் - கிழக்கு மாகாண சபையில் நாளை பிரேரணை தாக்கல்!

அநுராதபுரத்தில் மகளின் கைவிரல்களை வெட்டிய தந்தை கைது- பிரதேச சபை உறுப்பினர் மீது பொலிஸார் தாக்குதல்
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 08:58.19 AM GMT ]
அநுராதபுரம் - ஹொரவப்பத்தானை பிரதேசத்தில் 8 வயதான தனது மகளின் வலது கையில் ஐந்து விரல்களையும் சவர பிளேட்டினால் வெட்டி அதன் காயங்களுக்கு உப்பினை போட்ட தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
சந்தேகத்திற்குரிய தந்தை நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், கெப்பற்றிகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹொரவப்பத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமது சில்லறை கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இனிப்புகளில் இரண்டை குறித்த சிறுமி களவாக எடுத்து உண்டமை காரணமாக தந்தை, அவருக்கு இவ்வாறான தண்டனையை வழங்கியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 8 வயது சிறுமிக்கு இவ்வாறான சித்திரவதை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தந்தையின் அச்சுறுத்தல் காரணமாக அவர் யாரிடம் இதுபற்றி தெரிவிக்கவில்லை என்று காவல்துறை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், சிறுமியின் தாயார் விவாகரத்து கோரி நேற்று ஹொரவப்பத்தானை காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார். அந்த தருணத்திலேயே தமது மகளுக்கு ஏற்பட்ட துன்பத்தை அந்த பெண் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி ஹொரவப்பத்தானை – மொரகேவ வித்தியாலயத்தில் 3 ஆம் தரத்தில் கல்வி பயில்கின்றார்.
பாடசாலையில் ஆசிரியர்களால் குறித்த சிறுமியின் கையில் ஏற்பட்ட காயம் தொடர்பாக வினவப்பட்ட போது, பொய்யான காரணங்களை கூறியுள்ளார்.
பிரதேச சபை உறுப்பினர் மீது பொலிஸார் தாக்குதல்
நிட்டம்புவ பொது விளையாட்டு அரங்கில் நேற்று இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் இடைநடுவில் தம்மீது பொலிஸ் அதிகாரிகள் சிலர் தாக்குதல் நடத்தியதாக மீரிகம பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் ஜீவன் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.
காயமடைந்த உறுப்பினர் தற்போது கம்பஹா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேச சபை உறுப்பினரின் ஒரு காது தாக்குதலின் போது பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் சுகத் தர்மரத்ன தெரிவித்தார்.
இதன்காரணமாக, பிரதேச சபை உறுப்பினரின் காதில் உட்புறத்தில் ஏதேனும் உபாதை ஏற்பட்டுள்ளதாக என்பது குறித்து அறிவதற்காக அவர் வடக்கு செவிப்புல மற்றும் சுவாச பரிசோதனை பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.
நிட்டம்புவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே முதலில் தம்மை தாக்கியதாகவும், பின்னர் அருகில் இருந்த ஏனைய பொலிஸாரும் தாக்கியதாக மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவரும் ஜீவன் ஆரியரட்ன தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் வினவியது, அதன்போது பதிலளித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இவ்வாறான தாக்குதல் ஒன்று தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதன்படி, தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதிகாரங்களுடன் கூடிய 13வது திருத்தச் சட்டம் - கிழக்கு மாகாண சபையில் நாளை பிரேரணை தாக்கல்!
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 07:17.38 AM GMT ]
தமிழர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு முன்வைக்கப்படும் வரை அதிகாரங்களுடன் கூடிய 13வது திருத்தச் சட்டம் மாகாண சபைக்கு உரியதாக இருக்க வேண்டும் என்ற பிரேரணை கிழக்கு மாகாண சபையில் பிரேரிக்கவுள்ளதாக இரா துரைரெட்டணம்  தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாணசபையில் கடந்த மாதம், 13ஆவது திருத்தச்சட்டத்தினை அகற்றுவதற்கு எதிராக என்னால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சபை அமர்வு நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், நாளைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமர்வில், குறித்த பிரேரணையை நிகழ்ச்சிநிரலில் சேர்த்துக் கொண்டு மாகாண சபையில் விவாதித்து இவ் அவசரப்பிரேரணையை பிரேரித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்காக சபை நடவடிக்கைக் குழுவிடம் கோரவுள்ளேன்.
13வதுதிருத்தச் சட்டத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களான காணி, பொலிஸ் அதிகாரங்களையும் ஏனைய சில அதிகாரங்களையும் தெரிவிற்குழு, பாராளுமன்றம் நீதிமன்றம் ஊடாக, இரத்துச் செய்வதற்கு பல முயற்ச்சிகளை மேற்கொண்டும் ஆலோசித்தும் வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது. இவை சிறுபான்மை மக்களைபெரிதும் பாதிக்கும்.
எனவே 13வதுதிருத்தச் சட்டத்தில் உள்ளடங்கிய அதிகாரங்களை மாகாணசபை தொடர்ச்சியாக நடைமுறையில் வைத்திருப்பதற்கு இப்பிரேரணையை வழிமொழிந்து அதிகாரங்களை நடைமுறைப்படுத்த ஆவன செய்யுமாறு கௌரவ கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten