தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 juli 2013

திசை மாறிச்சென்ற இலங்கை மீனவர்கள் கைது! புதையல் தோண்டுவோருக்கு எதிராக கடும் சட்டம்! தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு : இல.கடற்படை அட்டகாசம்

திருமண வைபவத்தில் நபர் ஒருவரின் மூக்கை கடித்த ஐ.தே.க உறுப்பினர்! பிணையில் விடுதலை!
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 06:14.15 AM GMT ]
அத்தனகலை பிரதேசத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இன்னொருவரின் மூக்கை கடித்த சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.
திருமண வைபவத்தில் வைத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஒருவரின் மூக்கையே கடித்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எச்.பீ சுஜித் ரொசான் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலைக்கு சென்ற மாகாண சபை உறுப்பினர் துஷார ஹேமச்சந்திர மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சுஜித் ரொசானின் உறவினர்கள் மீது வைத்தியசாலை வளாகத்தில் வைத்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த வர்த்தகர் ஒருவரின் மூக்கை கடித்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரீர பிணையில் விடுதலை!

அத்தனகல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண வைபவத்தின் போது இலங்கை ஒலிபரப்பு கூட்டு தாபன ஊழியர் ஒருவரின் மூக்கை கடித்து காயம் ஏற்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் மஹர தொகுதி அமைப்பாளர் துஷார ஹேமசந்திரவை ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியிலான இரு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அத்தனகல நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் இந்த அனுமதியினை வழங்கியது.

நேற்று இரவு அத்தனகல பிரதேசத்தில் வைத்து இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஊழியரான சஜீத் ரொசான் என்பவரை சந்தேக நபரான அமைப்பாளர் துஷார ஹேமசந்திர மூக்கில் கடித்து காயப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் கடித்து காயப்படுத்தியதன் பின்னர் வைத்தியசாலையில் காயமடைந்த நபர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு வந்த அமைப்பாளர் துஷார காயமடைந்த நபரின் உறவினர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சம்பவம் இடம்பெற்றது முதல் கைது செய்யப்படாது இருந்து வந்த ஐ.தே.க அமைப்பாளர் இன்று காலை 10 மணியளவில் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். 

இதனையடுத்தே அவர் அத்தனகல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையில் செல்ல நீதவான் அமைப்பாளர் துஷார ஹேமசந்திரவுக்கு அனுமதியளித்தார்.
திசை மாறிச்சென்ற இலங்கை மீனவர்கள் கைது! புதையல் தோண்டுவோருக்கு எதிராக கடும் சட்டம்! தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு : இல.கடற்படை அட்டகாசம்
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 05:07.27 AM GMT ]
கடலில் திசை தெரியாமல் சென்ற இரண்டு இலங்கை மீனவர்கள் தமிழகம் ராமேஸ்வரம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் அவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் பகுதியைச் சேர்ந்த அவர்கள் கடந்த வாரம் கடலுக்கு சென்ற நிலையில், திசை தெரியாமல் இராமேஸ்வரம், அக்னிதீர்த்தம் கரைப்பகுதியில் ஒதுங்கியுள்ளனர்.
கைதானவர்கள் வர்ணகுலசூரிய மற்றம் ஜெயபாலன் புஸ்பகுமார் ஆகிய 30 வயதுடைய இளைஞர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தற்போது ராமேஸ்வரம் காவற்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டுவோருக்கு எதிராக கடும் சட்டம்
சட்டவிரோதமான முறையில் புதையில் தோண்டுவோருக்கு எதிரான சட்டம் இறுக்கப்படுத்தப்படவுள்ளது.
ஏற்கனவே இது தொடாபான சட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை விரைவாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மரபுரிமைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின் படி புதையல் தோண்ட அல்லது புராதன சொத்துக்களுக்க சேதம் ஏற்படுத்துகின்றவர்கள் பயன்படுத்துகின்ற வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் என்பன அரசுடமையாக்கப்படும்.
அத்துடன் இதற்கான தண்டனை காலம் மற்றும் அபராதங்கள் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன.
வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் தற்போது அதிக அளவில் புதையல் தோண்டும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு : இலங்கை கடற்படை அட்டகாசம்

கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படைனர் விரட்டியடித்துள்ளனர். இதனால், இன்று காலை 684 படகுகளில் சென்ற 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் கரை திரும்பி உள்ளனர். மற்றவர்கள் இந்திய கடல் எல்லையின் உட்பகுதிக்குத் திரும்பி உள்ளனர். வடக்கு இலங்கையைச் சேர்ந்த போரால் பாதிக்கப்பட்ட மீனவர் சங்கம் எனும் அமைப்பு சார்பில் இலங்கை அரசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே, அதனை தடுத்து நிறுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten