தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 juli 2013

போதைப் பொருளினை இல்லாதொழிப்போம்: பொதுபல சேனாவின் அதிரடி முடிவு


வாஸ் குணவர்தனவின் மகன் இன்று பொலிஸில் சரணடைவார்
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 02:33.39 AM GMT ]
கொழும்பு வடக்குப் பிராந்தியத்திற்கு பொறுப்பான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகன், ரவிந்து குணவர்தன இன்று பொலிஸில் சரணடைவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டத்தரணியின் ஊடாக ரவிந்து இன்று பொலிஸ் நிலையத்தில் சரணடையவுள்ளார்.
பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் என்பவரின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் வாஸ் குணவர்தனவின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரவிந்து குணவர்தனவிற்கும் இந்தக் கொலையுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் விசாரணை நடத்த வேண்டுமெனவும் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றின் அறிவித்திருந்தனர்.
மாலம்ப பல்கலைக்கழக மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை ஒன்றிலும் ரவிந்து ஆஜராகத் தவறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரவிந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டால் அவரது பாதுகாப்பு தொடர்பில் சர்ச்சை ஏற்படக் கூடுமென சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப் பொருளினை இல்லாதொழிப்போம்: பொதுபல சேனாவின் அதிரடி முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 02:41.13 AM GMT ]
போரின் போது உயிரிழந்தவர்கைள விடவும் போதைப் பொருள் பயன்பாட்டினால் அதிகளவானர்கள் உயிரிழப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே போதைப் பொருள் இல்லாதொழிப்பு நடவடிக்கைகளை பொதுபல சேனா அமைப்பு ஆரம்பிக்க உள்ளதாக அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்
போதைப் பொருள் பூமியாக மாற்றமடைந்துள்ள கொலன்னாவ பிரதேசத்திலிருந்து இந்த போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.
போதைப் பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் முஸ்லிம் கடும்போக்காளர்கள் செயற்பட்டு வருகின்றனர். இதனால், 13ம் திருத்தச் சட்டத்தை விடவும் ஆபத்தான பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்.
ஷாரிய சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பங்குச் சந்தையில் இயங்கி வருகின்றன. இது தொடர்பிலான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.
நீதிமன்ற நிர்வாகப் பணிகளில் ஒன்றான தோளுக்கு முதலி என்னும் பதவிக்காக இந்த ஆண்டு 65 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இதில் 51 பேர் முஸ்லிம்கள் அதிலும் 37 பேர் முஸ்லிம் பெண்களாவர். நாட்டின் சட்டம் ஒழுங்கு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten