[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 02:13.58 AM GMT ]
மூன்று மாகாண சபைத் தேர்தலிலும் முதலமைச்சர் வேட்பாளர் யாரொன்று அறிவிக்கப் போவதில்லையென ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது.
வடக்கு, மத்திய, வடமேல் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் எவரையும் அறிவிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குழுத் தலைவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான சுசில் பிறேம் ஜெயந்த் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற முடியாது என அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் முடிந்து பின்னரே ஆளும் கட்சியின் முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
மாவட்ட அடிப்படையில் தலைமை வேட்பாளர் யார் என்பதை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்னமும் முடிவு செய்யவில்லை.
வேட்பாளர் பட்டியல் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அதுகுறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுக்கு ஆதரவளித்த ஐ.தே.கவிற்கு தேர்தலில் வெல்ல முடியாது: பவித்ரா வன்னியாரச்சி
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 02:28.10 AM GMT ]
இம்முறைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் மேலும் வலுவிழக்கும். பிரபாகரனுக்கு பந்தம் பிடித்த ரணில் விக்ரமசிங்கவிடம் நாட்டை ஒப்படைக்க எவரும் தயாரில்லை.
மஹிந்த சிந்தனையே இந்த நாட்டு சாதாரண மக்களின் வாழ்க்கையாக அமைந்துள்ளது.
நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்து மக்களுக்கு நலன்களை வழங்கிய மிக முக்கியமான கொள்கையாக மஹிந்த சிந்தனையை குறிப்பிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கினிகத்தேன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten