ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு- கோப் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 02:55.59 AM GMT ]
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை நீக்குவது மாகாண சபை முறைகளில் பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 31ம் திகதி அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் கட்சியின் மத்திய செயற்குழு ஒன்று கூடவுள்ளது.
இதன் போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மீதான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோப் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது
பொது நிறுவனங்கள் தொடர்பிலான கண்காணிப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப்) அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமைச்சர் டி.யூ.குணசேகரவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தக்குழுவினால் 247 அரச நிறுவனங்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.
அத்துடன் 20 பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி சுமார் 30 அரச நிறுவனங்கள் நட்டம் ஈட்டும் நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் எயார் என்பன முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
13ஐ மாற்றுவது சிக்கலை உருவாக்கும்: விஜயதாஸ ராஜபக்ச- 13ஐ மாற்றுவதற்கு எதிரான குழுக்கள் ஒன்றிணைவு
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 02:47.47 AM GMT ]
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நீதித்துறை சார்ந்தவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்ட அமுலாக்கத்துடன் ஒப்பிடும் போது அதனை திருத்துதல் அல்லது இல்லாது செய்தல் என்பன அரசாங்கத்துக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தின் கீழ் மாகாண சபைகளை நிர்வாகம் செய்வதில் மத்திய அரசாங்கத்துக்கு அதிகார ரீதியான எந்த பிரச்சினைகளும் இல்லை.
ஆனால் இதனை மாற்றி அமைக்க முற்படும் போது இது தொடர்பில் பாரிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ஐ மாற்றுவதற்கு எதிரான குழுக்கள் ஒன்றிணைவு
அரசாங்கத்தில் உள்ள 13ம் திருத்தச் சட்டத்தின் மீதான திருத்தத்துக்கு எதிரான குழுக்கள் ஒன்றிணைந்து பொது அணி ஒன்றை உருவாக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து இந்த அணி உருவாக்கப்படவுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடதுசாரிகள் கட்சிகள் போன்றன இவ்வாறான ஒரு அணியை உருவாக்கி பொது வேட்பாளர்களை களமிறக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் அந்த கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten