தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 juli 2013

அனுரா பண்டாரநாயக்கவின் சொத்துக்களுக்கு நான்கு பேர் உரிமை கோருகின்றனர்!

சவுதி அரேபியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்!
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 01:45.05 PM GMT ]
இலங்கையிலிருந்து பணியாளர்களாக சென்ற சிலரை சவுதி அரேபிய காவல்துறையினர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தார் பாலத்திற்கு அடியில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும், சில இலங்கையர்கள் இது குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு முறையிட்டுள்ளனர்.
சவுதி அரசாங்கத்தின் தற்காலிக பொதுமன்னிப்பு காலம் நிறைவடைவதாக தெரிவித்தே அவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, வீசா அனுமதி காலம் நிறைவடைந்த நிலையில், மேலும் பல இலங்கையர்கள் ஒலாயா தடுப்பு முகாமிலும், அதேனா பாலத்திற்கு அடியிலும் தங்கியுள்ளனர்.
எனினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் இதுகுறித்து முறைப்பாடுகளை தெரிவித்த போதும், அதிகாரிகளினால்  தம்மை மீட்பதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், இலங்கையர்கள் உள்ளிட்ட சவுதியில் வீசா அனுமதி காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியுள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கு, சவுதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் நவம்பர் 4ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின ஊடக பேச்சாளர், பிரதி முகாமையாளர் மங்கள ரந்தெனிய இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
சவுதியில் தங்கியுள்ள பணியாளர்களுக்கு, சவுதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்தில் சுமார் 14 ஆயிரம் இலங்கையர்கள், சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தில் தம்மை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இவர்களில் இரண்டாயிரத்து 400 பேர் வரையில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அனுரா பண்டாரநாயக்கவின் சொத்துக்களுக்கு நான்கு பேர் உரிமை கோருகின்றனர்
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 04:04.50 PM GMT ]
முன்னாள் சபாநாயகரும், சிரேஸ்ட அமைச்சருமான அனுரா பண்டாரநாயக்கவின் சொத்துக்களுக்கு நான்கு பேர் உரிமை கோருகின்றனர்.
அனுரா பண்டாரநாயக்க உயிருடன் இருந்த போது அவருக்கு நெருக்கமாக செயற்பட்ட நான்கு பேர் அவரது சொத்துக்களுக்கு உரிமை கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த சொத்துக்களில் தமக்கும் ஒரு தொகுதி சொந்தமெனத் தெரிவித்துள்ளனர்.
அனுரா பண்டாரநாயக்கவின் உயிலில் இது குறித்து எழுதப்பட்டுள்ளது என குறித்த நான்கு பேரும் தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த உயிலை அனுரா பண்டாரநாயக்க உயிருடன் இருக்கும் போதே அவரே கிழித்தெறிந்தார் என முன்னாள் ஜனாதிபதியும் அனுராவின் சகோதரியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் சுனேத்திரா பண்டரநாயக்கவும் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிலின் பிரதியொன்று தம்மிடம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அனுரா பண்டாரநாயக்கவின் சொத்துக்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Geen opmerkingen:

Een reactie posten