[ புதன்கிழமை, 03 யூலை 2013, 02:54.22 PM GMT ]
கடந்த ஜுன் மாதம் 20ம் திகதி கார்டிப் மைதானத்தில் நடந்த போது புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட சர்வதேச திறந்த பிடியாணையை இன்று புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.
புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி குழப்பம் விளைவித்த லோகேஸ்வரின் மணிமாரன் என்பவருக்கே இவ்வாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம், லண்டன் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற போதே இவர் புலிக் கொடியுடன் மைதானத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கெஹலியவின் மகன் விமானத்தின் கதவை திறந்தமை நாட்டுக்கே அவமானம்!
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 01:22.36 PM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலசலகூட கதவு என நினைத்து விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த குடிபோதையில் இருந்த கிரிக்கெட் வீரர் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் அவதானத்துடன் இருக்கின்றோம்.
இந்த கிரிக்கெட் வீரரின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கும் மற்றும் முழு நாட்டிற்குமே நன்கு தெரியும்.
நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு போட்டிக்குச் சென்ற இந்த வீரர் 230 பயணிகளை ஏற்றிய விமானத்தில் குடிபோதையில் அநாகரீகமாக ஒழுக்கமின்றி நடந்து கொண்டமை முழு நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு பெரிய பதவியில் இருக்கும் நபர்களின் பிள்ளைகளுக்கு ஒழுக்கக் கோவை, சட்ட ஒழுங்கு கிடையாது.
இவ்வாறான செயற்பாடுகளை முழு நாட்டுக்கும் வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியமென அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை கேவலமான விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனது மகன் ஓடும் விமானத்தின் கதவைத் திறந்த விவகாரம் ஒரு சின்ன விடயம் எனவும், அதனை ஊடகங்களே முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து பெரிய பிரச்சினையாக்கியுள்ளது கண்டிக்கததக்கது எனவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten