தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 juli 2013

சகல அரசியல்வாதிகளும் 13 எனும் ஆயுதத்தை கையிலெடுத்துள்ளனர்: பசீர் ஷேகுதாவூத்

அவசரமாக கூடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. நாளை கொழும்பில்!
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 12:20.41 PM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் விசேட கூட்டம், கொழும்பில் நாளை பிற்பகல் 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் க.பிறேமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசியல் உயர்பீடம் ஒன்றை நிறுவுதல், அதன் கீழான தலைமைக்குழு, நிதிக்குழு, தேர்தல் குழு, அரசியல் விவகாரங்களுக்கான குழு உள்ளிட்ட நிர்வாக பொறிமுறையை ஏற்படுத்தி, இறுதி முடிவை வரையறை செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஜனநாயக ரீதியான ஒரு சக்தி மிக்க ஸ்தாபனமாக மாற்றி அமைப்பது தொடர்பிலும், வடமாகாண சபை தேர்தலில் யாரை முதன்மை வேட்பாளராக நியமிப்பது மற்றும் வட மாகாண சபை தேர்தலை வெற்றி கொள்வதற்கான உபாயங்களை வகுப்பது உள்ளிட்ட இலக்குகளை அடையும் ஒரு விசேட கலந்துரையாடலாகவே நாளைய கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
சகல அரசியல்வாதிகளும் 13 எனும் ஆயுதத்தை கையிலெடுத்துள்ளனர்: பசீர் ஷேகுதாவூத்
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 12:46.41 PM GMT ]
நாட்டில் ஆயுதங்கள் ஒழிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் 13 எனும் ஆயுதத்தை அனைவரும் கையிலெடுத்துள்ளனர். என உற்பத்தி திறன் விருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பசீர் ஷேகுதாவூத் தெரிவித்தார்.
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர்கள் மாநாடு இன்று மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள நந்த கோபன் மண்டபத்தில் நடைபெற்றJ.
அங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் பசீர் ஷேகுதாவூத் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சகல அரசியல் கட்சிகளும் சகல அரசியல்வாதிகளும் இந்த 13 எனும் ஆயதத்தை தூக்கி கையிலெடுத்து நிற்கின்றனர். ஆனால் இந்த 13 எனும் ஆயுதத்தினால் ஒரு காலமும் வெட்ட முடியாது. தேர்தல்கள் வந்தால் இந்த 13 ஐ இன்னும் கூடுதலாக தூக்கிப்பிடித்துக் கொண்டு நிற்பார்கள்.
பெருந்தேசியவாதத்தினர் இந்த 13யை முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் சிறு தேசியவாதத்தினர் இதை பாதுகாக்க வேண்டுமெனவும் நிற்கின்றனர். 13 என்பது இன்று நமது நாட்டில் பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
இனத்துவ அரசியலுக்குள் மூழ்கிடப்பதால் தான் தமிழர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் சிங்களவர், கிறிஸ்தவர் என்ற பிரிவினை வாதம் உள்ளது. பிரிவினை வாதத்திற்கு ஒரு போதும் வழி வகுத்து விடக்ககூடாது.
இன, மத மொழி பேதமின்றி நாம் அனைவரும் மக்கள் என நினைத்து கடமையாற்ற வேண்டும் என அமைச்சர் பசீர் ஷேகுதாவூத் இங்கு மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten