தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juli 2013

ஆசிரியையை மாணவர்கள் முன் மண்டியிட வைத்த ஆளும் கட்சி உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

துப்பாக்கிக் சூட்டில் பலியான நபர் போதைப் பொருள் விற்பனையாளரா?- யாழைச் சேர்ந்த சிங்கள திரைப்பட இயக்குனர் வைத்தியசாலையில் அனுமதி
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 06:43.45 AM GMT ]
கொழும்பு, கல்கிஸ்சை ஹூலுதாகொட பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான நபர் உண்மையில் போதைப் பொருள் விற்பனையாளரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, ஹூலுதாகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட அங்கிருந்த நபரை ஒருவரை சுட்டுக்கொன்றனர்.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட நபர், பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ய முயற்சித்த போதே அவர் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த நபர் ஸ்தலத்திலேயே இறந்தார்.
இறந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. எனினும் கொல்லப்பட்டவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதனால் சடலத்தை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
உயிரிழந்த நபர் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால் அது பற்றி, கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.
கல்கிஸ்சையில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் அடையாளம் காணப்பட்டார்
கொழும்பு கல்கிஸ்சை ஹூதலாகொட பிரதேசத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவை, களுபோத்த கலவான பகுதியை சேர்ந்த 23 வயதான அஜித் சம்பத் என அவரது தந்தை அடையாளம் காட்டியுள்ளார். கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.
இளைஞரை கைதுசெய்ய சென்ற போது, அவர் தம்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போதே அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் அந்த இளைஞர், கட்டிட வேலை செய்வதற்காக 04 வருடங்களுக்கு முன்னர், கொழும்புக்கு வந்துள்ளதாக இளைஞரின் தந்தை தெரிவித்தார். நான்கு வருடங்களாக தான் தனது மகனை காணவில்லை என்றும் அவர் பொலிஸாரிடம் கூறினார்.
இளைஞரின் மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதுடன் அவருக்கு மூன்று வயதில் ஆண் பிள்ளை ஒன்றும் இருப்பதாக தந்தை பொலிஸாரிடம் தெரிவித்தார்.
யாழைச் சேர்ந்த சிங்கள திரைப்பட இயக்குனர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல சிங்கள திரைப்பட இயக்குனரான ரி.பவானந்தன் கடும் சுகவீனம் காரணமாக தெஹிவளை களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மணாலயா என்ற சிங்கள திரைப்படம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய அவர், ஏ.பி. ராஜ் என்ற திரைப்பட இயக்குனரின், புதும லேலி (புதுமையான மருமகள்) அஹங்கார ஸ்திரி (அகங்கார பெண்) அதிசி விவஹய ( அவசர திருமணம்) மங்கலிக்கா உட்பட பல படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.
அத்துடன் சில படங்களுக்கு படத் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
சிறந்த திரைப்பட இயக்குனரான பவானந்தன், திரைப்படத்துறை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு சென்று சில காலம் வசித்து வந்தார். மீண்டும் கொழும்பு திரும்பிய அவர் கல்கிஸ்சை பிரதேசத்தில் வசித்து, சிங்கள திரைப்படத்துறைக்கு பங்களிப்பு செய்து வந்தார்.
ஆசிரியையை மாணவர்கள் முன் மண்டியிட வைத்த ஆளும் கட்சி உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 07:10.40 AM GMT ]
ஆசிரியை ஒருவரை மாணவர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் மண்டியிட வைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அந்த கட்சி வழங்கியுள்ளது.
புத்தளம் மாவட்டம் தம்புத்தேகம பாடசாலை ஒன்றின் ஆசிரியை மண்டியிட வைத்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான சரத் குமார என்பவர் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட அனுமதி வழங்குவது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனு தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சுதந்திரக் கட்சியின் வேட்புமனுக்களை தெரிவு செய்யும் குழுவின் உறுப்பினரும் சிரேஷ்ட அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌசி,
நேர்முக பரீட்சைக்கு சமூகமளித்திருந்த வேளை அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில், விரிவாக விசாரித்த பிறகு, அவர் தேர்தலில் போட்டியிட தகுதியானவர் என்று தீர்மானிக்கப்பட்டது.
எனினும், இந்த முடிவு தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய வேட்புமனு குழுவிற்கு அறிவித்த பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten