ஒட்டுசுட்டானில் வௌவால் தாக்குதல்! பெண்ணொருவர் பலி: நால்வர் படுகாயம்- விசர் நாய் கடிக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 05:22.00 AM GMT ]
வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வாகனமொன்றில் சென்று கொண்டிருந்த ஐந்து பேர் மீது மூன்று வௌவால்கள் சடுதியாக தாக்கியதால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளடதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த தமிழ் இளைஞனொருவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 12ம் திகதி வடி வாகனமொன்றில் குறித்த ஐந்து பேரும் வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு சென்றுகொண்டிருந்த போது ஒட்டுசுட்டான் வெள்ளை மலை ஏற்றத்தை அண்மித்த பகுதியில் மூன்று வௌவால்கள் வாகனத்திற்குள் உள்நுழைந்து குறித்த வயோதிபப் பெண்ணையும் சாரதியையும் தாக்கியுள்ளன.
சாரதி நிலை தடுமாறியதால், வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகாமையிலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் அவ் வாகனத்தில் பயணித்த ஐந்து பேரும் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் காயமடைந்த ஐவரில் மூவரை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்திசாலைக்கும் ஏனைய இருவரை யாழ்.வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வயோதிபப் பெண்ணின் தலையில் இரத்தக் கசிவு ஏற்பட்டமையால் நேற்று அதிகாலை 3 மணிக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவத்தில் முல்லைத்தீவு, முள்ளியவளை 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பாக்கியம் (வயது 70) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த க.தளையராஜசிங்கம் (வயது 58), பரமேஸ்வரன் தினுசன் (வயது 25) ஆகியோருடன் மேசன் தொழிலாளி ஒருவரும் கூலித் தொழிலாளி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
விசர் நாய் கடிக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி
விசர் நாய் கடிக்கு இலக்காகிய மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தகுந்த சிகிச்சை பெறத்தவறியதன் காரணமாக கிருமித்தொற்றிற்கு ஆளாகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
செம்பியன்பற்று தெற்கு, தாளையடியைச் சேர்ந்த விக்கினேஸ்வரன் றெஜிதா (வயது - 38) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் விசர் நாயினால் கடியுண்ட இவர் வைத்தியசாலைக்கு சென்று விலங்கு விசர்நோய் தடுப்பூசி போட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு மாதங்கள் தடுப்பூசி மருந்து ஏற்றிய நிலையில் தொடர்ந்து அந்த தடுப்பூசி மருந்தை ஏற்றச்செல்லாமல் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு விலங்கு விசர் நோய் கிருமிகள் உடலில் பரவியதன் காரணமாக அவர் சுகயீனமுற்ற நிலையில் கடந்த வியாழக்கிழமை மருதங்கேணி வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மந்திகை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மு.ப. 9.30 மணியளவில் அவர் அங்கு மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டில் தங்கியிருந்தநபர் இலங்கை திரும்பிய போது புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 06:11.52 AM GMT ]
சிவராஜா பிரகாஷ் என்ற இளைஞனே பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தின் 2வது மாடியிலிருந்து குதித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் தங்கியிருந்த அவர், 6 நாட்களுக்கு முன்னர், இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பும் தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசேட விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவர்களில் சிலர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.
இந்த கைதுகள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களின் உறவினர்களுக்கும் அறிவிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten