உண்மையை மறைத்து இலங்கை அரசை காப்பாற்றவே இலக்கியச்சந்திப்பு: தீபச்செல்வன் - யாழ் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 07:16.58 AM GMT ]
தமிழினத்தையும் தாயகத்தையும் அழித்து வரும் அரசு, இங்கு மக்கள் சந்தோசமாக இருக்கின்றார்கள் என்று அறிவித்துக்கொண்டு தானே சில நிகழ்வுகளை எமது மண்ணில் ஏற்பாடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன் தொடர்ச்சியாகவே இலக்கியச் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தீபச்செல்வன் குறிப்பிட்டார்.
வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டால், வடக்கில் தனி தமிழ் நாடு உருவாவதை தடுக்க முடியாது என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
கருத்துச் சுதந்திரத்தையும் படைப்புச் சுதந்திரத்தையும் குழி தோண்டிப் புதைத்த அநீதிக் காலத்தில் இலங்கை அரசு அவ்வாறான குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்பதை காட்டி இலங்கை அரசை காப்பாற்றும் அரசியலுக்காகவே இந்த சந்திப்பு அரசின் நிழலில் இயங்குபவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின் பின்னணியில் இருப்பவர்கள் வெளிநாடுகளிலிருந்து புலி எதிர்ப்புச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு போராட்டத்தை அழிக்க முன்னின்றனர் என்றும் இலங்கை அரசை ஆதரிப்பவர்கள் அந்த அரசின் ஆதரவுடன் இச்சந்திப்பை இப்பொழுது நடத்துவதாகவும் தெரிவித்தார்.
தாயகத்தின் உண்மை நிலமையை மறைக்க திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த சந்திப்பை புறக்கணிப்பது என்பது எமது மண்ணில் தொடரும் அநீதி குறித்து சாட்சியமளிக்கும் விதமாகவே அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ் சிவில் சமூக அங்கத்தவர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு
சிவில் சமூக அங்கத்தவர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்ப்பாண பிராந்திய கிளையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இச் செயலமர்வு எதிர்வரும் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 மணி வரை வைத்தியசாலை வீதியிலுள்ள கிறின் கிறாஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
சிவில் சமூக அங்கத்தவர்களுடனான உறவை மேம்படுத்தவும் அவர்களது சமூக செயற்பாடுகளை வினைத்திறன் கொண்டவையாக நடைமுறைப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் தொடர்பில் ஒரு தெளிவான புரிதலை ஏற்படுத்தும் முகமாகவும் இச்செயலமலர்வு அமையவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அறிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் முதலமைச்சரானால் தனிநாடு உருவாவதை தடுக்க முடியாது: ஹெல உறுமய - யாழ், பொதுவேட்பாளராக களமிறக்கப்படுகிறார் விக்னேஸ்வரன்
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 07:18.01 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில், இப்படியான அச்சுறுத்தல் மிகுந்த சூழலை எதிர்நோக்கியுள்ள நாட்டை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்படவேண்டும் என்பதை அனுமதிக்க முடியாது. வடக்கில் இருந்த சிங்கள மக்கள் விரட்டப்பட்டுள்ளனர். அங்கு இயற்கையான மக்கள் தொகை இல்லை.
விடுதலைப் புலிகள் திட்டமிட்டு ஏற்படுத்திய மக்கள் தொகையே தற்போது வடக்கில் உள்ளது. எனவே, நீதியான தேர்தல் நடைபெற வேண்டுமாயின், சிங்கள மக்களும் வடக்கில் மீள்குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வழங்குவது கட்டாயமானது.
இலங்கை தற்போது பெரும் பேராபத்தை நோக்கி நெருங்கி வருகிறது. வடக்கில் தனி தமிழீழ நாடு உருவாக்குவதற்கான அரசியல் வழியினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏனைய பிரிவினைவாத சக்திகளுடன் இணைந்து அமைத்துக் கொண்டுள்ளது.
இதன் முக்கிய வெளிப்பாடு என்றே வடக்கு மாகாணசபை தேர்தலில், கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரனின் தெரிவு செய்யப்பட்டதை கருத வேண்டும்.
ஆளுநரை நீக்க வேண்டும், 13ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்கள் போதுமானல்ல, ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என தற்போது கூறி வரும், விக்னேஸ்வரன் நாளை வடக்கின் முதலமைச்சரானால் என்னவாகும் என்பதை அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.
எனவே, இந்த சவால்கள் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளியிப்படுத்த வேண்டும்.
வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள முக்கிய 5 அதிகாரங்களை குறைப்பதற்காக ஹெல உறுமய போராட்டங்களை முன்னெடுக்கும். 60வீதமான தமிழர்கள் இன்று சிங்கள மக்களுடனே வாழ்கின்றனர்.இவர்கள் அனைவரும் தனி ஈழத்தை ஆதரிப்பவர்கள் அல்ல.
வடக்கில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும், 1988ஆம் ஆண்டு 35ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்தனர். இவர்களை புலிகள் அங்கிருந்து விரட்டினர் என்றார்.
யாழ்ப்பாணத்தில் பொதுவேட்பாளராக களமிறக்கப்படுகிறார் விக்னேஸ்வரன்
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்டத்தில் பொதுவேட்பாளராகவே நிறுத்தப்படவுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு, வேட்பாளர்களை ஒதுக்குவது தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில், யாழ்.மாவட்ட வேட்பாளர் ஒதுக்கீடு குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தக் கட்சியினதும் ஒதுக்கீட்டுக்குள் உள்ளடக்கப்படாது, பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார்.
அதேவேளை, எஞ்சியுள்ள 18 வேட்பாளர்களுக்கான ஒதுக்கீடு குறித்து நடத்தப்பட்ட பேச்சுக்களின் முடிவில், தமிழரசுக் கட்சி 7 வேட்பாளர்களையும், ஈபிஆர்எல்எவ் 4 வேட்பாளர்களையும், ரெலோ 3 வேட்பாளர்களையும், புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா 2 வேட்பாளர்களையும் நிறுத்துவதென முடிவாகியுள்ளது.
ஏனைய மாவட்டங்களின் வேட்பாளர் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பான இறுதி முடிவு வவுனியாவில் நாளை நடக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டத்துக்குப் பின்னரே எடுக்கப்பட்டு, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
தமிழர்களை நம்பவில்லை - பசிலுக்குப் பதிலடி கொடுத்தார் விக்னேஸ்வரன்
மாகாணசபைகளின் காணி காவல்துறை அதிகாரங்களை பறித்துக் கொள்ளும் முடிவு தற்கொலைக்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபைத் தேர்தல் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“மாகாணசபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை ஒப்படைக்காமல் அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை.
மாகாணங்களில் சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் பொறுப்பு அந்தந்த மாகாணசபைகளிடமே ஒப்படைக்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் தற்போது நிலை கொண்டுள்ள சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினர் அனைவரும் சிங்களவர்களே.
அங்கு, சிறிலங்கா இராணுவத்தின் 15 படைப்பிரிவுகள் முகாமிட்டுள்ளன.
இந்த செறிவான படைக்குவிப்பு மக்களுக்குப் பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள வழங்கப்பட்டால், தனியான இராணுவத்தை அமைக்க வழிவகுத்து விடும் என்றும், அது சிறிலங்கா இராணுவத்துக்கு இணையாக வலுப்பெற்று விடும் என்றும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.
இந்தக் கருத்து தமிழர்கள் மீதான நம்பகத்தன்மை குறைவால் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற அச்சங்கள் முற்றிலுமாக நீங்க வேண்டும். இத்தகைய கருத்துகள் நீங்குவதற்கு நீண்டகாலம் பிடிக்கும்.
நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலமே இந்த நிலையை மாற்ற முடியும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten