[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 09:39.22 PM GMT ]
ஈழத் தமிழரின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட சிறி லங்கா அரசின் தமிழர் மீதான திட்டமிட்ட படுகொலைச் செயல் இதுவாகும்.
திட்டமிடப்பட்ட வகையில் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் யூலை 24 முதல் 29 வரை தமிழர் மீதான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. 3000 தமிழர்கள் கொல்லப்படவும் ஆயிரக்கணக்கான வீடுகளும் வர்த்தக நிலையங்களும் அழித்துச் சூறையாடப்படவும் இலட்சக்கணக்கான தமிழர் சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாகவும் காரணமானது இந்த வன்முறை நிகழ்வு.
கனடியத் தமிழர் வரலாற்றில் மிக முக்கிய பதிவாகக் கறுப்பு யூலை பார்க்கப்படுகிறது. இவ் இன அழிப்பின் போதே ஆயிரக் கணக்கில் ஈழத் தமிழர் கனடாவிற் தஞ்சமடைந்தனர். கனடாவில் வாழக்கூடிய ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் ஏதோ வகையில் இந்நிகழ்வால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இடைவிடாது தொடர்ந்த சிறி லங்கா அரசின் இன அழிப்புச் செயல்களின் உச்சக்கட்டமாக 2009ஆம் ஆண்டு மே மாதம் அமைந்தது. திட்டமிட்ட இன அழிப்பால் இலட்சக்கணக்கான தமிழர் கொல்லப்பட்டும் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தும் நான்கு ஆண்டுகள் ஆன பின்பும் மக்கள் அடக்குமுறைக்கும் இன அழிப்புக்கும் தொடர்ந்தும் ஆளாகிவருகின்றனர். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படாத நிலையிலும் தமிழர்களுக்கு ஒரு சரியான தீர்வு முன்வைக்கப்படாத நிலையிலும் வலிமிகுந்த வாழ்வு தொடர்கிறது.
கறுப்பு யூலையின் 30ஆவது ஆண்டை வலியோடு நினைவுகூரும் அதே வேளை 30 ஆண்டுகள் கடந்தும் சிறி லங்காவில் நிலைமையில் எந்தவொரு மாற்றமும் தென்படவில்லை. தொடர்தும் தமிழ் மக்கள் சுதந்திரமின்றியும் சுயநிர்ணய உரிமையின்றியும் வடக்கு கிழக்கில் வாழ்ந்து வருகின்றனர். ஆயுதப் போராட்டம் அமைதியான பின்னரும் இராணுவக் கட்டுப்பாட்டில் பயத்தோடும் பாதுகாப்பற்ற நிலையிலுமே தமிழர் வாழ்கின்றனர்.
கறுப்பு யூலையின் நேரடியான அல்லது மறைமுகமான தங்கள் அனுபங்களை ஆவணப்படுத்தும் பணியைக் கனடியத் தமிழர் பேரவை பல ஆண்டுகளாய் ஆற்றிவருகிறது. தங்கள் அனுவத்தையும் பகிர்ந்து கொள்ளுமாடு கனடியத் தமிழர் பேரவை புலம்பெயர் தமிழருக்கு வேண்டுகோள் விடுக்கிறது.http://www.blackjuly83.com/SubmitStory.htm என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலமோ அல்லது குமுக வலைத்தளங்கள் ஊடாகவோ தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
கறுப்பு யூலை 30 ஆண்டு நிறைவையொட்டிச் சிறி லங்கா அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பை எடுத்துக்காட்டும் வகையில் கனடியத் தமிழர் பேரவை கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதில் கறுப்பு யூலைத் தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பியோரின் சாட்சியங்களும் அனுபவங்களும் அடங்கியிருக்கும். கனடியத் தமிழர் அனைவரையும் இக் கண்காட்சியிற் கலந்து கொள்ளுமாறு கனடியத் தமிழர் பேரவை அழைப்பு விடுக்கிறது.
நாள்: வியாழக்கிழமை யூலை 25 2013
நேரம்: மலை 6:00 மணி
இடம்: இசுகாபரோ சிவிக் நடுவம்
கூடிய விளக்கங்களுக்கும் நேர்காணல்களுக்கும் கனடியத் தமிழர் பேரவை 416.240.0078
ஸயுர கப்பலை தாக்கி கடற்படை வீரர்களைக் கொன்ற விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு தாக்கல்!
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 10:01.48 PM GMT ]
விளக்கமறியலில் இருக்கும் குற்றம் சுமத்தப்பட்டோர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதில் ஒருவர் சிங்களவர் ஆவார். இவர்களுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இக் குற்றத்தைச் செய்ததற்காக சிங்களவரின் உதவியும் விடுதலைப் புலிகளுக்கு கிடைத்துள்ளது.
நீர்கொழும்பில் கடற்படை கப்பலைத் தாக்க திட்டமிட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் கடற்படை தலைவரான சூசை, பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்ரனி, ராணி குமார், நிக்ஸன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
தற்போது மரணித்துள்ள நீர்கொழும்பு பகுதியிலுள்ள புலி ஆதரவாளரான வர்ணகுலசூரிய கிறிஸ்டி பெர்னாண்டோ என்ற “புலி கிறிஸ்டி” என்பவர் நீர்கொழும்பு பகுதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
2006 ஜூன் 16ஆம் திகதி கப்பல் தாக்குதலுக்குள்ளாகி அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எட்டு ஆண்டுகளுக்கும் மேல் கைதாகி வைக்கப்பட்டுள்ளனர். பகிரங்க நீதிமன்றத்தில் இவர்களுக்குக் குற்றப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.
முறைப்பாட்டாளரின் சாட்சியாளர்களாக 68 பேர் பெயரிடப்பட்டுள்ளதால் வழக்கை விரைவாக முடிக்க தமது வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தவறை ஏற்றுக் கொள்வது தொடர்பாக சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா தெரிவித்தார். இது தொடர்பாக கோரிக்கை விடுக்குமாறு முறைப்பாட்டாளரின் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி சமிந்த அதுகோரள தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten