[ புதன்கிழமை, 24 யூலை 2013, 02:34.59 AM GMT ]
ராஜபக்ச அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக நாட்டின் சிவில் நிர்வாகம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இம்முறைத் தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கூடியதல்ல என்ற போதிலும் ஆட்சி மாற்றத்தின் முதல் கட்டமாக இதனைக் கருத முடியும். இம்முறை அனைவரும் வாக்களிக்க வேண்டியது மிகவும் அவசியமானது.
கடந்த தடவை தேர்தலில் வாக்களிக்காத ஒருவரையேனும் இம்முறைத் தேர்தலில் வாக்களிக்கச் செய்ய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விளையாட்டுத்துறை கூட இன்று இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது.
பயிற்சியாளர் பதவிகள் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறையில் மட்டுமன்றி வெளிநாட்டு ராஜதந்திர சேவையிலும் 70 வீதமானவர்கள் தொழில்சார் தகுதியற்றவர்கள். இவர்களில் அதிகளவானவர்கள் இராணுவ அதிகாரிகள்.
அனுபவமும் தொழில்சார் தகைமையும் அற்ற ராஜதந்திரிகள் சேவையில் ஈடுபடுத்தப்படாமை நாட்டுக்கு பாரிய பாதகத் தன்மையை ஏற்படுத்தக் கூடும்.
வடக்கில் சிவில் நிர்வாகப் பணிகளிலும் இராணுவத்தினர் தலையீடு செய்கின்றனர். வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் அதே நிலைமை நீடிக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடி உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களுக்கு தொலைக்காட்சிகளில் காண்பிக்கும் அளவிற்கு நன்மைகள் கிடைக்கவில்லை.
இன்னமும் ஒரு லட்ச ரூபாவே வழங்கப்படுகின்றது. ஹோட்டல்கள் மற்றும் ஏனைய முதலீடுகளின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தில் குறைந்தது பத்து லட்ச ரூபா படைவீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
சிவில் நிர்வாகத்தையே நாம் எதிர்பார்க்கின்றோம் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு தேர்தல்களில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் தலையீடு! தயா மாஸ்டர் - கிழக்கில் சமாதானத்தை சீர்குலைக்க சூழ்ச்சித் திட்டம், ரியர் அட்மிரால்
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 02:32.16 AM GMT ]
வடக்கு தேர்தல்களில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் தலையீடு செய்வதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கு இடையில் நிலவி ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன.
இந்தத் தேர்தலை இலக்கு வைத்து சில வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் செயற்படத் தொடங்கியுள்ளன.
இது தொடர்பில் உயர் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.
தமிழ் அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்த இருவர் இவ்வாறு வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
குறித்த அரசியல் கட்சி வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினரின் தேவைக்கு ஏற்ற வகையில் செயற்பட்டு வருகின்றது என தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் சமாதானத்தை சீர்குலைக்க சூழ்ச்சித் திட்டம்
கிழக்கு மாகாணத்தின் சமாதானத்தை சீர்குலைப்பதற்கு சூழ்ச்சித் திட்டமொன்று திட்டப்பட்டு வருவதாக மாகாண ஆளுனர் ரியர் அட்மிரால் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கு இடையில் நிலவி ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன.
கிழக்கின் சமாதானம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் அவசியமானது. சில தரப்பினர் இவ்வாறு நாட்டுக்கும் சமாதானத்திற்கும் எதிராக செயற்பட்டு வருகின்றனர்.
அனைத்து இன மக்களும் இதனைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இப்தார் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது ஆளுனர் விஜேவிக்ரம இதனைக் குறிப்பிட்டுள்ளார்
Geen opmerkingen:
Een reactie posten