[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 10:14.40 AM GMT ]
கோப் குழு எனப்படும் நாடாளுமன்ற பொது வர்த்தக மத்திய குழுவின் அறிக்கை எதிர்வரும் ஜுலை 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டின் நடவடிக்கைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த அறிக்கையே இவ்வாறு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கோப் குழுவினால் இந்தமுறை 256 நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 110 நிறுவனங்கள் தொடர்பில் இறுதி அறிக்கை முடிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அரச நிறுவனங்களுள் மின்சார சபை, சிறிலங்கன் விமான சேவை, மிஹின் லங்கா விமான சேவை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, சமுர்த்தி அதிகார சபை மற்றும் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
கோப் குழு தமது அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் எதிர்வரும் 9 ஆம் திகதி கூடவுள்ளதாக குழு உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
இரா.சம்பந்தன் புதிய இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து பேச்சுவார்த்தை
[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 09:05.13 AM GMT ]
இந்த சந்திப்பின்போது 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், அதனை தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்திய உயர்ஸ்தானிகரிடம் விளக்கியுள்ளார்.
13வது திருத்தச்சட்ட விவகாரம் பற்றி ஆராய்வதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர்வரும் 7ம் திகதி இலங்கை செல்ல உள்ளார்.
அதேவளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று புதுடெல்லிக்கு விஜயம் செய்கிறார்.
அமைச்சரது விஜயத்தை முன்னிட்டு இந்திய தூதுவர் வை.கே. சிங்ஹாவும் இன்று புதுடில்லி பயணமாகின்றார்.
இந்த நிலையிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய உயர்ஸ்தானிகரை நேற்று முன்தினம் சந்தித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten