தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 4 juli 2013

ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முழுமையாக நடத்தப்படவில்லை: முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி வழக்கு தாக்கல்

மக்களின் பணத்தில் அரசாங்கம் தனது கனவை நனவாக்க இடமளிக்க முடியாது: கரு ஜயசூரிய (செய்தித் துளிகள்)
[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 08:20.07 AM GMT ]
கனவு காண்பதற்கு ஆட்சியாளர்களுக்கு உரிமை இருந்த போதும், மக்களின் பணத்தை செலவிட்டு அந்த கனவை நனவாக்கி கொள்ளவதை அனுமதிக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கரு ஜயசூரிய பேசும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், அமைதி ஏற்பட்டு தமது வாழ்க்கை நிலைமை உயரும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
எனினும் மிகபெரும் தொகை பணம், எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமல் பலம் தராத திட்டங்களுக்காக வீண் விரயமாக்கப்பட்டது.
அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் போன்ற மிகப் பெரிய முதலீட்டு திட்டங்களால் மக்களின் பணம் வீண்விரயமாகியுள்ளது.
வீண் விரயமும், ஊழலும் அதிகரித்துள்ளதுடன் அரசாங்க துறையின் நஷ்டங்களுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின் எயார் போன்ற நிறுவனங்களே பொறுப்புக் கூறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் இதனை அமைச்சர் டியூ. குணசேகர ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்திருந்தார் எனவும் கரு ஜயசூரிய தெரிவி்த்துள்ளார்.
தந்தைமார் 35 அடி உயரத்தில் இருந்து குதித்தால் புதல்வர்கள் 35ஆயிரம் அடியிலிருந்து குதிக்கின்றனர்: ஹரின் பெர்ணான்டோ
தந்தைமார் 35 அடி உயரத்தில் இருந்து குதிக்க முயற்சிக்கும் போது, புதல்வர்கள் 35, 000 அடி உயரத்தில் இருந்து குதிக்க முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்து்ளளார்.
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் புதல்வர்கள் பலர் போட்டியிட உள்ளதாகவும் அமைச்சர்கள் பலரின் புதல்வர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று (04) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் பல இடங்களில் தற்போது, உரத்திற்கான தட்டுப்பாடு நிலவுகிறது. 350 ரூபாவுக்கு உரத்தை வழங்குவதாக கூறி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. தற்போது உர பொதி ஒன்றின் விலை 1500 ரூபா. இதனை விவசாயிகளால் கொடுக்க முடியாதுள்ளது.
அத்துடன் 13 எனற புதிய திரைப்படம் களத்தில் இறக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்கவும் விமல் வீரவன்சவும் பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை சேர்ந்த 21 மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்பு தடை தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை.
நாட்டில் உள்ள 69 வீதமான புதையிரத கடவைகள் பாதுகாப்பற்றவை, அவற்றை நிர்மாணிக்க 3 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. ஆனால் அரசாங்கம் அமைச்சர்களை போஷிப்பதற்காக 04 பில்லியன் ரூபா பணத்தை செலவிடுகிறது எனவும் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தனிநபர் வருமானம் 3,000 டொலர்கள் என அரசு கூறினாலும் பெருபாலான குடும்பங்களில் மாத வருமானம் 15,000 ரூபா- மத்தும பண்டார
இலங்கையில் தனிநபர் வருமானம் 3000 அமெரிக்க டொலர்கள் என அரசாங்கம் கூறிய போதிலும் நாட்டில் உள்ள பெருபாலான குடும்பங்களின் மாத வருமானம் சுமார் 15000 ரூபா என அரச சேவை தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் வருமானம் குறைவாக இருந்தாலும் அரசாங்கத்தின் புள்ளவிவரங்களுக்கு அமைய 4 போர் கொண்ட ஒரு குடும்பம் ஒரு மாதம் ஜீவிக்க 44,000 ரூபா தேவைப்படுகிறது.
உயர்ந்து வரும் வாழ்க்கை செலவுக்கு ஏற்ப வாழ்க்கை செலவு கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை அரசாங்கம் வர்த்தகமானியில் வெளியிடாததால், உயர்ந்து வரும் வாழ்க்கை செலவுக்கு ஏற்ற சம்பளம் ஊழியர்களுக்கு கிடைப்பதில்லை.
இதன் காரணமாக நாட்டில் வாழும் மக்களின் பெருபாலானவர்கள் தமது மூன்று நேர உணவில் ஒருநேரத்திற்கு உணவை உட்கொள்ள முடியாத நிலையில் வாழ்கின்றனர் எனவும் மத்தும பண்டார கூறியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முழுமையாக நடத்தப்படவில்லை: முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி வழக்கு தாக்கல்
[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 07:59.10 AM GMT ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு விசாரணை முழுமையான முறையில் நடத்தப்படவில்லை என மீண்டும் புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இன்னும் பலரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஓய்வு பெற்ற சிபிஐ காவல்துறை அதிகாரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பார்க்க சாதாரண ஆள் போல இருந்தாலும், காவல்துறை ஆய்வாளராக இவர் கடந்த வந்த பாதைகள் கரடுமுரடானது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த மோகன் ராஜ், சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த வழக்கில் தம்மை தொடர்புபடுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு சிபிஐ-யிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற மோகன்ராஜ், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இன்னும் பலரிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில், மத்திய அரசு 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக சந்திராசாமி, விடுதலை புலிகள் அமைப்பின் சர்வதேச தொடர்புகளை கவனித்தவர் என்று கருதப்பட்ட குமரன் பத்மநாதன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்கிறார் மோகன்ராஜ்.
கடந்த 2008 ஆம் ஆண்டு மலேசியாவில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதன், இலங்கை அரசின் பாதுகாப்புடன் தற்போது கொழும்பில் வசித்து வருகிறார்.
குமரன் பத்மநாதனை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை ராஜீவ் காந்தி வழக்கில் மட்டுமல்ல, இரு நாட்டு உறவுகளுக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் சர்வதேச வல்லுனர்கள்.

Geen opmerkingen:

Een reactie posten