தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juli 2013

நேர்மையாக சிந்திக்கும் பௌத்த மக்கள் இனவாதம் தூண்டப்படுவதை அனுமதிக்க மாட்டார்கள்: ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் உறுப்பினர் ஆளும் கட்சியுடன் இணைய தீர்மானம்
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 11:35.32 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் யெஹிய்யா ஆப்தீன் இந்த கட்சியில் இருந்து விலகி, ஆளும் கட்சியுடன் இணையத் தீர்மானித்துள்ளார்.
கட்சியின் புத்­தளம் மாவட்ட முஸ்லிம் காங்­கிரஸ் அமைப்­பா­ளரான அவர், நட­வ­டிக்­கையில் அதி­ருப்தி கொண்­டுள்ளதாகவும் இதனால் கட்­சி­யி­லி­ருந்து விலகி அர­சுடன் இணைந்­து­கொள்ள தீர்மானித்­துள்ளதாகவும் தெரிவி்த்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூன் இணைந்து 15 வரு­டங்­க­ளாக அர­சியலில் ஈடுபட்டு வரு­கின்றேன். எனினும் முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு, கிழக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அரசியல் நடத்தி வருகிறது. ஏனைய பிர­தே­சங்­களை புறக்­க­ணித்து வரு­கிறது.
எனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் ஆலோசகர்களுடன் கலந்துரையாடிய பின்னர், முடி­வு­களை ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றை நடத்தி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பேன் என தெரிவித்தார்.
இதே­வேளை. 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் மீதான திருத்­தப்­ பி­ரே­ரணை வடமேல் மாகாண சபையில் வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­பட்­ட­போது அர­சுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­மைக்­காக முஸ்லிம் காங்கிரஸ் கடந்த மாத இறு­தியில் கட்­சி­யி­லி­ருந்து ஆப்­தீனை தற்­கா­லி­க­மாக நீக்கியிருந்தது.
எனினும் அவர் அர­சாங்­கத்தின் அச்­சு­றுத்தல் கார­ண­மா­கத்தான் ஆத­ர­வாக வாக்­க­ளித்தி­ருந்­த­தாக கூறி, கட்­சியின் தலை­மை­யிடம் மன்­னிப்­பு ­கோ­ரி­யி­ருந்தார். இந்த நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள போவதாக யெஹிய்யா ஆப்தீன் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
நேர்மையாக சிந்திக்கும் பௌத்த மக்கள் இனவாதம் தூண்டப்படுவதை அனுமதிக்க மாட்டார்கள்: ரவூப் ஹக்கீம்
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 11:54.56 AM GMT ]
இனவாதம் தூண்டப்படுவதை, நாட்டில் இன ஐக்கியம் மற்றும் சமாதானத்தை விரும்பும் நேர்மையாகச் சிந்திக்கும் பௌத்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசலில் வழமையாக நடந்து வரும் ஜூம்ஆ தொழுகையை நேற்று அங்கு கூடாது என ஊவா மாகாண அமைச்சரான அனுரவிதாரன கமகே தடுத்து நிறுத்தியமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பௌத்த அடிப்படைவாத அமைப்புகளில் ஒன்றான பொதுபலசேனாவின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரர், மஹியங்கனை பிரதேசத்தில் இனவாதத்தை தூண்டி வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை மஹியங்கனை பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்திற்குச் சென்ற மாகாண அமைச்சர், பள்ளிவாசல் ஸ்தாபக தர்மகர்த்தா சீனி முஹம்மது ஹாஜியாரின் மகன் சப்ரியிடம் பள்ளிவாசலில் தொழுகை நடத்தக் கூடாதென்றும், அதனை மூடிவிடுமாறும் எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக அங்கு ஜூம்ஆத் தொழுகை நடைபெறவில்லை. இது முஸ்லிம்களை மனவேதனைக்கு உள்ளாக்கும் செயல்.
இதனிடையே, இந்தப் பள்ளிவாசல் தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதி பிரதேச சபையில் தீவிரவாத கருத்துகளை பரப்பி வருவோர் ஒன்று கூடி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், அடுத்த மாதம் 2 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த அவர்கள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் சில இடங்களில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவற்றை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதால் இலங்கையின் ஒரு சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் தமது சன்மார்க்க கடமைகளை இடையூறுகளும், அச்சமும் இன்றி நிம்மதியாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ஹக்கீம்.

Geen opmerkingen:

Een reactie posten