தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juli 2013

மன்னாரில் பல இடங்களில் சிங்களவர்களை குடியேற்ற அரசு முயற்சி: அடைக்கலநாதன்!

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்விற்கு இலங்கை அகதி 80 மாணவர்கள் விண்ணப்பம்
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 11:22.12 AM GMT ]
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு 2013- 2014 கல்வியாண்டில் 80 இலங்கை அகதி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளர்.
இவர்களில் இதுவரை 35 பேர் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான சேர்க்கை கடிதத்தையும் பெற்றுச் சென்றுள்ளனர்.
அரசு ஒதுக்கீட்டிலான பொறியியல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில், இலங்கை அகதி மாணவர்களும் பங்கேற்று, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இடங்களைத் தேர்வு செய்து படித்து வருகின்றனர்.
இலங்கையிலிருந்து அகதிகளாக குடியேறுபவர்களின் குழந்தைகள் தமிழகத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு கடந்த 1984ம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்போடு, கலை - அறிவியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், பொறியியல் கல்லூரிகளில் 25 இடங்களிலும், மருத்துவப் படிப்பில் 20 இடங்களிலும், வேளாண் படிப்பில் 10 இடங்களிலும் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
2013-14 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கு 80 இலங்கை அகதி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் இதுவரை 35 பேர் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான சேர்க்கை கடிதத்தை பெற்றுச் சென்றுள்ளனர்.
எதிர்வரும் 29ம் திகதி வரை இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது என்பதால், இந்த ஆண்டு மொத்தம் 50 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
மன்னாரில் பல இடங்களில் சிங்களவர்களை குடியேற்ற அரசு முயற்சி: அடைக்கலநாதன்
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 11:11.21 AM GMT ]
போர்ச்சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை முழுமையாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காத அரசு, மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் உட்பட மாவட்டத்தின் பல இடங்களில், அரசாங்கம் 6 ஆயிரம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
எனினும் போரினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து பல இடங்களில் அகதிகளாக வாழ்ந்து வரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழ், முஸ்ஸிம் குடும்பங்களை உரிய முறையில் அவர்களுடைய சொந்த மண்ணில் குடியேற்றுவதில், அரசு அசமந்த போக்கை காட்டி வருகிறது.
ஆனால் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள பல்வேறு உத்திகளை அரசு கையாண்டு வருகின்றது.
தமது மீள் குடியேற்றங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தமது சொந்த மண்ணில் மீள் குடியேற முடியாத நிலையில் உள்ள மக்கள் இது தொடர்பில் என்னிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த மக்களை அரசு, முதலில் உரிய முறையில் மீள்குடியேற்ற வேண்டும்.
இந்த மக்கள் மீள் குடியேற்றாது, அரசு சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்குமானால், அதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும்.
எனவே யுத்தத்தினால் பல பாதிப்புக்களையும் இழப்புக்களையும் சந்தித்த தமிழ், முஸ்ஸிம் மக்களை அவர்களுடைய சொந்த மண்ணில் உரிய முறையில் குடியேற்ற உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten