தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு ஏற்பட்ட கதியே மகிந்த அரசுக்கும் ஏற்படும்!- அஜித் பெரேரா

யாழில் மோட்டார் சைக்கிளில் சென்ற திருடனால் பெண்ணின் தங்கச் சங்கிலி அபகரிப்பு! யாழில் மதுப்பிரியர்களின் அட்டகாசம்!
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 07:39.08 AM GMT ]
யாழ்ப்பாணம் குருசோ வீதியில் பெண்ணின் நகைகள் அபகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு தனது சிறிய மகனுடன் சென்றுகொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் குறித்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் குருசோ வீதியைச் சேர்ந்த இன்பராஜ் சோபியா என்பவரது நகைகளே இவ்வாறு திருடனால் பறித்துச் செல்லப்பட்டுள்ளது.
திருடனால் அபகரிக்கப்பட்ட தங்க நகைகள் ஏழே முக்கால் பவுண் என தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணினால் யாழ் பொலிஸ் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மதுப்பிரியர்களின அட்டகாசத்தை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேரங்களில் பொலிசாரின் வாகன ரோந்து நடவடிக்கை
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் மதுப்பிரியர்களின அட்டகாசத்தை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேரங்களில் பொலிசாரின் வாகன ரோந்து நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏல்.துஸ்மிந்தா தெரிவித்துள்ளார்.
இரவு நேரங்களில் இத்தகைய ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் கடந்த ஒரு மாத காலத்தில் மதுப் போதையில் பொது மக்களுக்கு பொது இடங்களில் இடைஞ்சலான முறையில் நடந்து கொண்டமை சம்பந்தமாக பத்துப் பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இரவு நேர ரோந்து நடவடிக்கைகள் மூலம் திருட்டு சம்பவங்கள் கட்டுப்படுத்துவதுடன் பொது மக்களுக்கு இடையூறாக நடப்பவர்களும் கூட கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு ஏற்பட்ட கதியே மகிந்த அரசுக்கும் ஏற்படும்!- அஜித் பெரேரா
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 07:59.27 AM GMT ]
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காது, 1976ம் ஆண்டு அணிசேரா நாடுகளின் மாநாட்டை நடத்திய சிறிமாவோ பண்டாரநாயக்க 1977ம் ஆண்டு வீட்டிக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதேவிதமாக தற்போதைய மகிந்த அரசுக்கும் ஆட்சியை இழந்து வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை உருவாகும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ஜீ. பெரேரா தெரிவித்தார். 
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பல ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது, பொதுநலவாய மாநாடு என்ற திருமணத்தை கொண்டாட தயாராகும் அரசுக்கு அடுத்த வருடம் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.
நாட்டின் சுகாதாரம், கல்வி உட்பட நாட்டின் முக்கியமான துறைகளுக்கு செலவிட பணம் இல்லாத சூழ்நிலையில் 1976 ஆம் ஆண்டு அணிசேரா நாடுகளின் மாநாடு நடத்தப்பட்டது.
அப்படியான நிலைமையிலும் சிறிமாவோ பண்டாரநாயக்க அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்காக பெரும் தொகை பணத்தை செலவிட்டார்.
இதனால் இறுதியில் மக்களின் அதிருப்தி காரணமாக 1977 ஆம் ஆண்டு அவர் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இன்றைய அரசாங்கமும், நாட்டில் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து போன்ற மானியங்களை வழங்கும் துறைகளில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், பெரும் தொகை பணத்தை செலவிட்டு, பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்த உள்ளது.
அரசாங்கம், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது, மாநாட்டிற்காக பிராடோ, ஜக்குவார், ஹெலிகொப்டர் போன்றவற்றை கொள்வனவு செய்ய பெரும் தொகை பணத்தை செலவிட்டு வருகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் பின், நாட்டில் எஞ்சியிருக்க போவது, இந்த பிராடோ, ஜக்குவார் வாகனங்களும் ஹெலிகொப்படர்கள் மட்டுமே. அவையும் நாட்டில் உள்ள மேல் தட்டு வகுப்பினருக்கே சொந்தமாக போகிறது.
இதனால் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்திற்கு ஏற்பட்ட கதியே இன்றைய மகிந்த அரசாங்கத்திற்கும் ஏற்படப் போகிறது என தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten