[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 08:08.17 AM GMT ]
இந்த துப்பாக்கி விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
வாஸ் குணவர்தன திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த போது, விடுதலைப்புலிகள் பயன்படுத்திய துப்பாக்கி தொகை ஒன்றை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
ரவிந்து குணவர்தன இந்த துப்பாக்கிகளில் ஒன்றையா பயன்படுத்தி வந்தார் என்பதை கண்டறிய விசாரணைகளை நடத்தி வருவதாக குற்றப்புலானாய்வு திணைக்களத்தின் பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் ஷியாம் கடத்திச் செல்லப்பட்ட சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது மகனும் இந்த கொலைக்கு ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
அத்துடன் மாலபே தகவல் தொழிற்நுட்ப கல்லூரியின் மாணவர் ராமநாயக்க என்பவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ரவிந்து குணவர்தனவிற்கு எதிரான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பது குறிப்பிடதக்கது

கொழும்பு துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டில்: நீண்டகால குத்தகையும் கைச்சாத்து!
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 08:28.16 AM GMT ]
கொழும்பு தெற்கு புதிய துறைமுகத்திற்கு அடுத்ததாக உள்ள 230 ஹெக்ரேயர் நிலப்பரப்பரப்பை துறைமுக அதிகாரசபை பெற்றுக்கொண்டு அதில் சீன நிறுவனத்துக்கு முதலீட்டு வாய்ப்பு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைநகரின் கரையோரத்தை நவீனமயப்படுத்தும் விதமாக சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் இந்த 'துறைமுக நகரை' உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரியாத் பண்டு விக்ரம குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் தற்போது துறைமுகத்திற்கு அருகிலுள்ள நிலத்தை துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அங்கே சிறிய நகரம் ஒன்றை உருவாக்கவுள்ளோம்.
இது தொடர்பில் சீன நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் செப்ரெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும். புதிய துறைமுக நகரத்தைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நிலத்தை மீள உரிமையாக்கும் நடவடிக்கை 39 மாதங்களுக்குள் நிறைவடைந்து விடும் என நாம் நம்புகிறோம் எனவும் விக்ரம மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய துறைமுக நகரத்தில் 22 மாடிகளைக் கொண்ட தலைமைப் பணியகங்கள், விடுதிகள், குடியிருப்புக்கள் மற்றும் ஏனைய வசதி வாய்ப்புக்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்திடம் 99 ஆண்டுக் குத்தகைக்கு 50 ஹெக்ரேயர் நிலங்கள் வழங்கப்படும் எனவும் இலங்கை அரசின் கீழ் செயற்படும் துறைமுக அதிகார சபையின் தலைவர் விக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten