தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வளிக்க இந்தியா உறுதி: மன்மோகன் சிங் கடிதம்!

பருத்தித்துறையில் தூக்கிட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலம் மீட்பு! வாகன விபத்தில் பிரதேச சபை உறுப்பினர் பலி
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 07:05.52 AM GMT ]
ஓடக்கரை பருத்தித்துறையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி முகவரியைச் சேர்ந்த மகேந்திரன் - கிரிதரன் (வயது-32) என்பவரே அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்தில் ஆளும் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் பலி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஆர்.பி.ரத்நாயக்க வாகன விபத்தில் கொல்லப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
மின்னேரிய பிரதேசத்தில் உள்ள பாலம் ஒன்றுக்கு அருகில் வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
தனது சொந்த கெப் வாகனத்தில் நேற்றிரவு ஹிங்குராங்கொடவிலிருந்து தனது வீட்டுக்குச் செல்லும் வழியில் அவர் இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
கொல்லப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் சமுத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றியிருந்தார்.
வவுனியாவில் இருந்து திருகோணமலை சென்ற பஸ்ஸில் மோதுண்டு ஒருவர் பலியானார்
வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற வவுனியா பஸ் டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் ஒன்றில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கொப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
வீதியில் சென்ற கணவன் மனைவி மீதே பஸ் மோதியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். சமபவத்தில் படுகாயமடைந்த பெண் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெல்லாங்கடவல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பஸ் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன விபத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 3 பேர் காயம்
வாழைச்சேனை பாசிக்குடா வீதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். 
நாய் ஒன்று வீதியின் குறுக்கே கடந்து செல்ல முற்பட்ட வேளையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் உட்பட ஒரு சிவிலியனும் காயமுற்றுள்ளனர்.
நேற்று  மாலை 7.30 மணியளவில் கல்குடாவில் இருந்து வாழைச்சேனை நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒன்றின் பின் ஒன்றாக பயணம் செய்து கொண்டிருந்த போது கல்குடா நாமகள் வித்தியாலயத்திற்கு முன்பாக கட்டாக்காலி நாய் ஒன்று வீதியின்  மறுபக்கம் கடந்து சென்றபோது முன்னால் வந்த மோட்டார் சைக்கிள் நாயினை காப்பற்ற முயற்சித்த போது வேகக் கட்டுப்பாட்டை குறைத்தவேளை பின்னால் வந்த மற்றைய மோட்டார் சைக்கிள் அதில் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

காயமுற்ற மூவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வளிக்க இந்தியா உறுதி: மன்மோகன் சிங் கடிதம்!
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 06:50.17 AM GMT ]
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும் என்பதி்ல் இந்தியா உறுதியாக இருப்பதாக ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில்  பிரதமர் மன்மோகன், கூறியுள்ளார். 
இலங்கை அரசின் 13வது சட்ட திருத்தம் பற்றி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும் என்பதி்ல் இந்தியா உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் சுய கவுரவத்துடன் வாழ வேண்டும் என்பதை நீண்ட காலமாக இந்தியா வலியுறுத்தி வருவதை குறிப்பிட்டுள்ள பிரதமர், அதற்காக இறுதி வரை பணியை தொடருவோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமை, அதிகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten