தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juli 2013

இலங்கை 13வது திருத்தச் சட்டம்! - மந்திரமா? மர்மமா?

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 08:16.56 AM GMT ]
யாழ்.பல்கலைக்கழகத்தை அண்மித்த பரமேஸ்வரா சந்தியில், வீதியில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவான துப்பாக்கி ரவைகள் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளன.
கோப்பாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து இவற்றை மீட்டுள்ளனர்.
வீதியில் பாலம் அமைக்கும் நோக்குடன் நிலத்தைக் தோண்டியபோது இரண்டு பீப்பாய்களில் மண்ணுடன் போட்டு இவை புதைக்கப்பட்டுள்ளன.
இவற்றை இராணுவத்தினர் மீட்டு கொண்டு செல்ல முற்பட்டபோது, பொலிஸார் அவற்றை தடுத்து நிறுத்தி பொறுப்பேற்றுள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை 13வது திருத்தச் சட்டம்! - மந்திரமா? மர்மமா?
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 07:59.24 AM GMT ]
மூன்று மாதங்களுக்குப் பிறகு, கடந்த 16ம் திகதி காலையில் அறிவாலயத்தில் டெசோ கூட்டம் நடந்தது. சளித் தொல்லையால் அவதிப்பட்ட கலைஞர், சுருக்கமாகவே பேசினார். ஆனாலும், "ராஜீவ்- ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின்படி, ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒரே மாகாணமாக இணைத்தார்கள்.
இதற்காக, அந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் 13-வது திருத்தம் என்ற பெயரில் முக்கியமான திருத்தத்தையும் செய்தார்கள். அதற்கு வேட்டு வைக்கும் வகையில், அந்த நாட்டு சர்க்காரில் உள்ளவர்களே பேசிவருகிறார்கள். ஆனாலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தியாக இல்லை. எனவே, 13-வது திருத்தத்தை ரத்துசெய்ய விட்டுவிடக்கூடாது'' என்று கலைஞர் அழுத்தமாகப் பேசினார்.

அதன்படி, 13-வது திருத்த விவகாரம் முதல் தீர்மானமாக எழுதப்பட்டது. கொமன்வெல்த் மாநாட்டுப் புறக்கணிப்பு, தமிழக மீனவர் மீதான தாக்குதல் ஆகியனவும் சேர்க்கப்பட்டன.

அடுத்து டி.ஆர். பாலு, ""ஈழத் தமிழர்களின் பூர்வீக பூமியான வட, கிழக்கு மாகாணங்களின் வரலாற்று இணைப்பைத் துண்டிக்கும் நோக்கத்தில், வடக்கில் உள்ள வவுனியாவுக்கும் கிழக்கில் உள்ள திருகோண மலைக்கும் இடையில் `வெலி ஓயா` எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கி, அதில் சிங்களவர்களை மட்டும் குடியேற்றும் திட்டத்தை ராஜபக்சே அரசாங்கம் தீவிரமாகச் செய்து வருகிறது. எந்த நாட்டிலும் தேர்தல் நடக்கும் போது நில அமைப்பு, எல்லையை மாற்றக் கூடாது என்பது ஐ.நா. விதி. இதை அனைத்துலகமும் ஏற்றுக்கொண்டு உள்ளது'' என்று குறிப்பிட்டுப் பேச, அதைப் பற்றி தனி தீர்மானம் கொண்டுவரலாம் என்று கலைஞர் ஆமோதித்தார்.

வரைவுத் தீர்மானங்களில், மத்திய அரசைக் கேட்டுக்கொள்வது என்கிறபடி வாசகங்கள் இருந்ததை, மாற்றியமைக்கலாம் என கி.வீரமணி சொல்ல, சுப.வீரபாண்டியனும் அதை வலுவூட்டினார். உடனே கலைஞர், "பிரதமர் மன்மோகன் சிங் கூட, 13-வது திருத்தத்தை உருக்குலைக்க இலங்கை அரசாங்கம் முயற்சிக்குதுனு அதிருப்தியைச் சொல்றார். ஆனா, ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை நடை முறைப்படுத்தும்படி போதுமான அழுத்தம் கொடுக்கலை'' என்று கூறி, கேட்டுக் கொள்வது என்பதை வலியுறுத்துவது என மாற்றினார்.

5-ம் திகதி நாடாளுமன்றம் கூடுகிறது. அந்த நேரத்தில் ஆர்ப் பாட்டம் வைக்கலாம் என வீரமணி சொல்ல, ஆகஸ்ட் 8ம் திகதி என நாள் குறித்தார் கலைஞர். அதையும் சேர்த்து, மொத்தம் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கிடையில், டெல்லிக்கும் கொழும்புவுக்கும் இடையில் அரசுரீதியான பேச்சுவார்த்தைகள், அடுத்தடுத்து நடந்தபடி இருந்தன. முன்னதாக, கடந்த மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களும் டெல்லிக்கு வந்து, பிரதமரைச் சந்தித்துச் சென்றனர். அதையடுத்து, இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சரும் ராஜபக்சேவின் தம்பியுமான பசில் ராஜபக்சே, டெல்லி வந்து, பிரதமரையும் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் சந்தித்துப் பேசினார். 

இந்நிலையில், இந்தியா, இலங்கை, மாலைதீவுகள் மூன்று நாடுகளுக்கும் இடையில் கடல்பாதுகாப்பு தொடர்பான கூட்டு ஆலோசனை, கடந்த 8, 9 திகதிகளில், கொழும்புவில் நடந்தது. அதில் கலந்துகொண்ட இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், ராஜபக்சேவையும் அவருடைய தம்பிகளான பசில், கோத்தபாய ராஜபக்சேக்களையும் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்மந்தன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதற்கு முன்பு, இந்திய அரசுத் தரப்பில் இருந்து இலங்கையின் பல தரப்பினரையும் யாரும் சந்தித்தது இல்லை. குறிப்பாக, 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு, இப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை என்பதால், மேனனின் இந்தப் பயணம் இரு நாட்டு ராஜிய மட்டங்களில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேனனேகூட, இலங்கைத் தூதராக இருந்தபோதும் வெளியுறவுச் செயலாளராக இருந்தபோதும் இப்படி அனைத்து தரப்பினரையும் சந்தித்து இருக்கமாட்டார் என்கிறார்கள், தெற்காசிய விவகார நிபுணர்கள்.

மேனனின் இந்தப் பயணம் குறித்து கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 13-வது திருத்தம் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது, 2009 மே-க்குப் பிறகு, உலக நாடுகளிடமும் இந்தியாவிடமும் இலங்கை அரசு உறுதியளித்தபடி, 13-வது திருத்தத்தைவிட மேம்பட்ட தீர்வை நிறைவேற்ற வேண்டும் என மேனன் வலியுறுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது. இதையும், கடந்த மாதத்தில், கலைஞருக்கு மன்மோகன் அனுப்பிய பதில் கடிதத்தில், 13-வது திருத்தம் என்பது இலங்கையில் உள்ள பல்வேறு கட்சிகள் தீர்மானிக்க வேண்டியதாக இருக்கிறது என்று குறிப்பிட்டதையும், இப்போது, மேனன் அங்கு கூறிவந்துள்ளதையும் ஒப்பிட்டு, இது முக்கியமான மாற்றம் என்று விளக்கம் சொல்கிறார்கள்.

வழக்கமாக, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கைக்குச் செல்லும் சிவசங்கர் மேனன், இந்த முறை ராணுவ ஜெட் விமானத்தைப் பயன்படுத்தியதைக் குறிப்பிட்டுச் சொல்லும் சில ஆய்வாளர்கள், இலங்கை அரசுக்கு இந்தியா தரும் எச்சரிக்கை சிக்னல் என்றெல்லாம் சொல்கிறார்கள். 

ஈழத் தமிழர் நிலம் எல்லாம் எலும்புருக்கி நோயைப் போல சிங்களப்படை பரவி, பாதிக்கும் மேற்பட்ட இடங்களை பெளத்தமயம் ஆக்கியுள்ள நிலையில், இப்போது நடைமுறையி லேயே இல்லாத, 13-வது திருத்தம், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன தீர்வைத் தரப் போகிறது என்பது மர்மமாகவே இருக்கிறது!

Geen opmerkingen:

Een reactie posten