[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 05:00.57 AM GMT ]
இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவில் நஞ்சருத்தி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
சிறினிவாசப்பூர் பகுதியில் வைத்து தமது காதலனின் முன்னால் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்திருப்பதாக த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
குறித்த பெண்ணும் அவரது காதலரும் ஒன்றாக குவைட்டில் பணியாற்றி வந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதாக வாக்களித்த இந்திய இளைஞர், குவைத்திலிருந்து இந்தியா திரும்பியதன் பின்னர் மீண்டும் குவைத்துக்கு திரும்பவில்லை.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரிமாதம் அந்த இலங்கை பெண் இந்தியாவில் உள்ள சிறினிவாசப்பூர் சென்று தமது காலனையும் அவரது பெற்றோரையும் சந்தித்துள்ளார்.
குறித்த பெண், அவர்கள் வழங்கிய உறுதிமொழியை தொடர்ந்து மீண்டும் குவைத் சென்றுள்ளார். உறுதியளித்தபடி தமது காதலர் குவைத் வராத நிலையில் மீண்டும் கடந்த மே மாதம் இந்தியா வந்துள்ளார்.
அங்கு தமது காதலர் உள்ளுர் பெண் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டதை அறிந்த அந்த பெண், காதலனை தேடி சென்று அவருக்கு முன்பாகவே நஞ்சருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது உடல்தேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன,மத பேதங்களை ஏற்படுத்தி அரசாங்கத்தை பிளவுபடுத்துவதற்கு முயற்சி: எஸ்.பி.திசாநாயக்க
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 04:18.09 AM GMT ]
இன, மத பேதங்களை ஏற்படுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தை பிளவுபடுத்துவதற்கு சில சமய அமைப்புகள் நடவடிக்கை எடுத்துவருவதாக உயர்கல்வியமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மினிபே பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் பொதுபல சேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் முகமான இந்த நிலைப்பாட்டை வெளியிட்டார்.
ஞானசார தேரர் அண்மையில் குருணாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது உயர்கல்வியமைச்சர் நாட்டின் கல்வித்துறையை நாசப்படுத்தி வருவதாக குற்றம்சுமத்தியிருந்தார்.
இவ்வாறான கருத்தை அவர் வெளியிட்டமையை கண்டித்துள்ள உயர்கல்வியமைச்சர் குறித்த தேரரின் அண்மைக்கால இனவாத நடவடிக்கைகளையும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten