[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 03:50.37 AM GMT ]
ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் விசேட பிரதிநிதி அழைப்பிதழ்களை 53 அங்கத்துவ நாடுகளுக்கும் கையளிக்கவுள்ளாரென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
நவுருதீவில் இடம் பெற்ற கலவரத்தில் இலங்கையர்களின் நிலை குறித்து அறியத் தருமாறு அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரை கோரியிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.
இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கு அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள 53 நாடுகளும் பங்குபற்றவுள்ளன. இந்நாடுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியின் பிரதிநிதி நேரில் சென்று முறைப்படி அழைப்பிதழ்களை கையளிப்பாரெனவும் செயலாளர் அமுனுகம கூறினார்.
உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள சர்வதேச நாடுகளுக்கான அழைப்பிதழ்களை தயாரிக்கும் மற்றும் வடிவமைக்கும் பணிகளில் பொதுநலவாய செயலணி ஈடுபட்டு வருகின்றது.
இதேவேளை, 53 நாடுகளுக்கும் அழைப்பிதழ்களை எடுத்துச் செல்லும் ஜனாதிபதியின் பிரதிநிதி தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலிருந்து ஜனாதிபதி பிரதிநிதிகள் அழைப்பிதழ்களுடன் அநேகமான நாடுகளுக்குச் செல்லவுள்ள நிலையில் சில நாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதிகளாக சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்களை நேரில் சந்தித்து, அழைப்பிதழ்களை கையளிப்பது குறித்தும் ஆராயப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பொது நலவாய அமைப்பின் உறுப்புரிமை பெற்ற அனைத்து நாடுகளுக்கும் ஜனாதிபதியின் பிரதிநிதி நேரில் சென்று அழைப்பிதழை வழங்குவாரெனவும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து நாடுகளும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
நவுரு கலவரம்: 60 மில்லியன் டொலர் உடைமைகள் சேதம் - இலங்கையர் குறித்து வெளிவிவகார அமைச்சு விளக்கம்
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 03:20.17 AM GMT ]
இச் சம்பவம் தொடர்பில் இலங்கை அகதிகளின் நிலைமை குறித்து தமக்கு எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
இலங்கையில் தாங்கள் துன்புறுத்தப்படுவதாக நாட்டையும் அரசாங்கத்தையும் குற்றஞ்சாட்டியே இவர்கள் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா சென்றடைந்தனர். இந் நிலையில், அவுஸ்திரேலிய அரசாங்கம் கேட்டுக் கொண்டாலேயொழிய நாம் மேற்படி புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயம் எமக்கு இல்லை. அத்துடன் நவுரு தீவில் இருக்கும் வரை அந்நாட்டு அரசாங்கமே அவர்களுக்காக பொறுப்புக் கூற வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
நவுரு தீவில் இடம் பெற்ற கலகத்தில் இலங்கையர் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என வினவியதற்கே செயலாளர் இவ்வாறு பதிலளித்தார்.
இதேவேளை இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்படுவார்களாயின் இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் அவர்களை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாரெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை யாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நவுரு தீவில் பாரிய கலவரத்தை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் இது வரையில் 125 பேர் அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நவுரு தீவில் வெடித்த பெரும் கலவரத்தையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள 500 இற்கும் மேற்பட்ட கைதிகளைத் தேடி அவுஸ்திரேலிய பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலிய பொலிஸாரின் தடையீட்டினையடுத்து நவுரு தீவில் தற்போது அமைதி நிலவுகிறது.
இந்த கலவரத்தினால் சுமார் 60 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான உடைமைகள் சேதமாக்கப் பட்டிருப்பதாகவும் அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் கணிப்பிட்டுள்ளது.
கலவரத்தின்போது தப்பிச் சென்ற அகதிகளைத் தவிர்ந்த எஞ்சிய 420 புகலிடக் கோரிக்கையாளர்களும் இன்னுமொரு தடுப்பு முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமையன்று நவுரு தீவில் ஈரான், ஈராக், பாலஸ்தீனம் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களே பாரிய கலவரத்தை ஏற்படுத்தியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten