[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 03:51.58 AM GMT ]
அப்படியான நபர்களையோ, குழுக்களையோ பலவந்தமாக அரசாங்கத்திற்கு வைத்திருக்கும் தேவை தமக்கு இல்லை என ஜனாதிபதி கூறியதாக அரசாங்கத்தின் மிகவும் நம்பத்தகுந்த தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் மாகாண சபை தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வேட்புமனு வழங்குவது குறித்து கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருக்கும் நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதால், அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை விட்டு விலகிச் செல்ல எந்த தடையுமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானமானது எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பார்த்துள்ளவர்கள் மாத்திரமி்ன்றி, ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் இது பொருந்தும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இனத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரிக்க முடியாது: மகிந்த
இனத்தின் அடிப்படையில் நாடு ஒன்றை பிரிக்க முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள எந்த இனத்திற்கும், மதத்திற்கும் தனியான பிரதேசங்கள் இல்லை என்றும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வதற்கு முக்கியமானது பிரதேசம் அல்ல சுதந்திரமான நாடு என்றும் அவர் கூறியுள்ளார். புனரமைப்புச் செய்யப்பட்ட பேருவளை சீனாவத்தை ஜூம்மா பள்ளிவாசலை மக்களின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இன்றைய அரசு நாட்டின் தேசிய ஐக்கியம், சமய சகவாழ்வு ஆகியவற்றை கட்டியெழுப்ப கடும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, சிங்களம், தமிழ், முஸ்லிம் என சகல மக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அடிப்படைவாதம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், பிறந்த நாட்டை நேசிக்கும் ஒரே சகோதர மக்களாக சகல மக்களும் வாழ வேண்டும் என்றும் மகிந்த இதன் போது வலியுறுத்தியுள்ளார்.
மாகாணசபையின் அதிகாரங்கள் குறைப்பட்டு பாதிப்புக்கள் ஏற்படுமாயின் சம்பிக்கவும் விமலுமே பொறுப்பு: நுவ.மாநகரசபை உறுப்பினர்
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 05:03.19 AM GMT ]
மாகாண சபையின் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை எடுத்தால், அதனால் நாட்டில் ஏற்படக் கூடிய பாதிப்பான நிலைமைகளுக்கு அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவுமே பொறுப்புக் கூறவேண்டும் என்று நுவரெலியா மாநகர சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
மாநகர சபையில் நடைபெற்ற மாதாந்த கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படாமல், அனைவரும் அமைதியாக வாழும் சூழல் நாட்டில் இருக்க வேண்டுமாயின், 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் மீண்டும் திருத்தங்களை செய்யும் முயற்சிகளை கைவிட வேண்டும் எனவும் ராஜாராம் கூறியுள்ளார்.
13 வது அரசியல் அமைப்புத. திருத்தச்சட்டத்தில் மீண்டும் திருத்தங்களை செய்வதற்கு எதிரான யோசனை ஒன்றை சபையில் சமர்பித்துள்ள ராஜாராம், அதனை சகல உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றவும் முயற்சித்துள்ளார்.
எனினும் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததன் காரணமாக யோசனை முன்வைக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டதாக நுவரெலியா மாநகர சபையின் தகவல்கள் தெரிவித்தன.
Geen opmerkingen:
Een reactie posten