தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 juli 2013

காயான்கேணியில் புதைத்து வைத்திருந்த ஒரு தொகுதி துப்பாக்கி ரவைகள் மீட்பு!!

வடமாகாணசபை தேர்தலை நடாத்துமாறு ஜனாதிபதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு- மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகள் இன்று கலைக்கப்படும்
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 05:04.09 AM GMT ]
வட மாகாணசபைத் தேர்தலை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு, ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, வட மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைகள் இன்று நள்ளிரவு கலைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகள் இன்று கலைக்கப்படும்
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகள் இன்று கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர், இந்த மாகாணங்களின் தேர்தல்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் இன்றைய தினம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாகாண சபைகளை கலைப்பது தொடர்பான ஆவணங்களில் தாம் கையெழுத்திட்டு அவற்றை மாகாண ஆளுநர்களுக்கு கையளித்துள்ளதாக மத்திய மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
ஜனாதிபதி அல்லது ஆளுநரினால் மாகாண சபைகள் கலைக்கப்படுவதற்கான அறிவித்தல்கள் வெளியிடப்பட்டு ஒரு வார காலத்தினுள் வேட்பு மனுக்களை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

காயான்கேணியில் புதைத்து வைத்திருந்த ஒரு தொகுதி துப்பாக்கி ரவைகள் மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 05:22.03 AM GMT ]
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திலுள்ள காயான்கேணி  கடற்கரைப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை துப்பாக்கி ரவைகளை தாம் மீட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித்த ஜயரட்ன தெரிவித்தார்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட தேடுதல் பணியின் மூலம் ரீ.56 ரக துப்பாக்கி ரவைகள் சுமார் 15 ஆயிரம் மீட்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவைகள் அனைத்தும் வாகரை சுற்றுலா நீதிமன்றில் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் தமது நாசகார வேலைகளுக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten