[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 01:38.12 AM GMT ]
கடந்த 23வருடங்களுக்கும் மேலாக கோணப்புலம் - 165 குடும்பங்கள், நீதவான் முகாம்- 40 குடும் பங்கள் பல்வேறுபட்ட இன்னல்களுக்கும், அவலங்களுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற னர்.
வலிகாமம் வடக்கு மக்களை நலன்புரி முகாம்களிலிருந்து மீள்குடியேற்றம் என்ற போர்வையில் அழைத்துச் சென்று காங்கேசன்துறை, கீரிமலை பகுதிகளிலுள்ள அரச நிலங்களில் அடாத்தாக குடியேற்ற இராணுவம் முயற்சி எடுத்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள மக்கள், சொந்த இடங்களில் குடியேற்றினாலேயன்றி வேறிடங்களில் குடியேற மாட்டோம் எனவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் மக்களுடைய நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் முற்றாக விழுங்கப்பட்டிருக்கின்றது.
இதற்குள் நேற்று மாலை குறித்த முகாம்களுக்குள் நுழைந்த படையினர் மக்களை குடியேற்றப்போவதாகவும், இன்று காலை கோணப்புலம் முகாமில் இடம்பெறும் சந்திப்பில் மக்களை கலந்துகொள்ளுமாறும் கேட்டிருக்கின்றனர்.
இதன்போது சொந்த இடங்களிலா குடியேற்றம் என மக்கள் கேட்டதற்கு தற்காலிகமாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை காணிகளிலும், கீரிமலையை அண்மித்துள்ள அரசாங்க காணிகளிலும் குடியேற்றவுள்ளதாக படையினர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து குழப்படைந்த மக்கள், தற்காலிகம் என்ற போர்வையில் குடியேற்றிவிட்டு அதை இடத்தை நிரந்தரமாக்கி, சொந்த இடங்களை கொள்ளையிட எடுக்கப்படும் முயற்சி என்பதை உணர்ந்து விடயத்தை கூட்டமைப்பின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இதனையடுத்து இன்று காலை இடம்பெற்ற கூட்டத்திற்கு மக்கள் எவரும் பெரிதாக கலந்துகொள் ளவில்லை எனவும் வலி,வடக்கில் நிரந்தர நிலம் இல்லாத புதிய குடும்பங்கள் சிலரே கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் இராணுவத்தினதும், அரசாங்க வேட்பாளர்கள் சிலரினதும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
வலி.வடக்கு மக்களை அரச நிலங்களில் குடியேற்ற இராணுவம் முயற்சி?
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 01:38.12 AM GMT ]
கடந்த 23வருடங்களுக்கும் மேலாக கோணப்புலம் - 165 குடும்பங்கள், நீதவான் முகாம்- 40 குடும் பங்கள் பல்வேறுபட்ட இன்னல்களுக்கும், அவலங்களுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற னர்.
இந்நிலையில் மக்களுடைய நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் முற்றாக விழுங்கப்பட்டிருக்கின்றது.
இதற்குள் நேற்று மாலை குறித்த முகாம்களுக்குள் நுழைந்த படையினர் மக்களை குடியேற்றப்போவதாகவும், இன்று காலை கோணப்புலம் முகாமில் இடம்பெறும் சந்திப்பில் மக்களை கலந்துகொள்ளுமாறும் கேட்டிருக்கின்றனர்.
இதன்போது சொந்த இடங்களிலா குடியேற்றம் என மக்கள் கேட்டதற்கு தற்காலிகமாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை காணிகளிலும், கீரிமலையை அண்மித்துள்ள அரசாங்க காணிகளிலும் குடியேற்றவுள்ளதாக படையினர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து குழப்படைந்த மக்கள், தற்காலிகம் என்ற போர்வையில் குடியேற்றிவிட்டு அதை இடத்தை நிரந்தரமாக்கி, சொந்த இடங்களை கொள்ளையிட எடுக்கப்படும் முயற்சி என்பதை உணர்ந்து விடயத்தை கூட்டமைப்பின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இதனையடுத்து இன்று காலை இடம்பெற்ற கூட்டத்திற்கு மக்கள் எவரும் பெரிதாக கலந்துகொள் ளவில்லை எனவும் வலி,வடக்கில் நிரந்தர நிலம் இல்லாத புதிய குடும்பங்கள் சிலரே கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் இராணுவத்தினதும், அரசாங்க வேட்பாளர்கள் சிலரினதும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten