தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 juli 2013

வாக்குப் பலத்தினை சரியாக பயன்படுத்தினால் தமிழர்கள் சகல அதிகாரங்களுடனும் வாழமுடியும்: ஜனா

சவூதியின் பொது மன்னிப்புக் காலத்தில் 3 ஆயிரம் இலங்கையர் நாடு திரும்பியுள்ளனர்
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 01:57.28 AM GMT ]
சவூதி அராபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கு நாட்டில் இருந்து வெளியேறுவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு
காலத்தினுள் 3 ஆயிரம் இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
ஜெட்டா நகரில் உள்ள இலங்கை தூதரக காரியாலயத்தின் ஊடாக இந்த தகவலறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் 9 ஆயிரத்து 600 பேருக்கு தற்காலிக கடவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 4 ஆயிரத்து 500 பேர் சவூதி அரேபியாவில் இருந்து வெளியேறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தூதுவர் ஆதம் பாவா உதுமாலெப்பே தெரிவித்துள்ளார்.
சவூதி அராபிய அரசாங்கத்தினால் தமது நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் நொவெம்பர் மாதம் 3 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
வாக்குப் பலத்தினை சரியாக பயன்படுத்தினால் தமிழர்கள் சகல அதிகாரங்களுடனும் வாழமுடியும்: ஜனா
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 02:19.16 AM GMT ]
வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமது வாக்கு பலத்தினை சரியான முறையில் முழுமையாக பயன்படுத்துவதன் மூலமே எதிர்காலத்தில் வடகிழக்கில் சகல அதிகாரங்களும் கொண்ட மக்களாக தமிழ் மக்கள் வாழமுடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரவெட்டி விநாயகர் ஆலயத்துக்கு மாகாண சபை உறுப்பினரான கருணாகரனின் பன்முகப்படுத்தப்பட்ட 75 ஆயிரம் ரூபா நிதியொதுக்கீட்டில் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கப்பட்டன.
வவுணதீவு, கரவெட்டி விநாயகர் ஆலய முன்றிலில் கரவெட்டி பிரதேச கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றய அவர்,
வடக்கு தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு தேர்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகவும் பயந்த நிலையில் உள்ளது. இந்த தேர்தல் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு முக்கியத்துவமானதாகும்.
இன்று வடக்கு தேர்தலை உலக நாடுகள் உன்னிப்பாக பார்த்து கொண்டுள்ளன. இந்த தேர்தலில் பல குளறுபடிகளை செய்து அரசாங்க வெற்றிபெற முயற்சிகளை மேற்கொள்ளும். எவ்வாறாயினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலில் வெற்றிபெறும்.
கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு முழுமையாக வாக்களிக்காத காரணத்தினால்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் அதிகமாக ஆசனங்களை பெறமுடியவில்லை. கிழக்கில் தமிழ் மக்கள் மிகவும் குறைந்தளவிலேயே தமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
எமது முஸ்லிம் சமூகத்தினர் வாக்களிப்பு தினத்தன்று முதல்வேலையாகச்சென்று வாக்களித்துவிட்டே தமது ஏனைய பணிகளை மேற்கொண்டனர்.ஆனால் தமிழ் மக்கள் அதில் பெரிதாக அக்கறை செலுத்தாத நிலையே இருந்தது.
வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் ஒரே குறிக்கோளில் வாக்களிக்க வேண்டும். தமிழ் மக்கள் முழுமையாக வாக்களிப்பதன் மூலமே வடகிழக்கில் தமிழ் மக்கள் முழு அதிகாரங்களும் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
13வது அரசியலமைப்புச் சட்டம் தமிழ் மக்களுக்கு இறுதி தீர்வு அல்ல.அதில் இருக்கும் அதிகாரங்களை நாங்கள் பயன்படுத்தி எமது உரிமையை பெற்றுக்கொள்ளும் இறுதித் தீர்வை நோக்கி பயனிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்தலாம். அதனால்தான் இலங்கை அரசாங்கம் 13வது சட்டத்தினை இல்லாமல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இன்று அரசாங்கத்தில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் அபிவிருத்தியை காட்டி தமிழ் மக்களுக்கு உரிமை தேவையில்லையென்கின்றனர். நாங்கள் கடந்த 30 வருடமாக உரிமைக்காகவே போராடினோம்.
அபிவிருத்தி தேவையில்லையென்று நாங்கள் கூறவில்லை. உரிமையெதுவும் இல்லாத இடத்தில் அபிவிருத்தியால் எதுவித பிரயோசனமும் இல்லை எனத் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten