தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 juli 2013

இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினம்! லண்டனில் ஆர்ப்பாடடம்!

வட மாகாணத்தில் பல்லாயிரக் கணக்கானோர் தே.அடையாள அட்டை அற்றவர்கள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 07:27.35 PM GMT ]
வட மாகாணத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டை அற்ற  நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்பான கபே மற்றும் ஆட்பதிவு திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆய்வு நிலையம் என்பன இணைந்து கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இரண்டு நடமாடும் சேவைகளை மேற்கொண்டன. 

இந்த சேவைகளின் போது, வட மாகாணத்தில் தேசிய அடையாள அட்டை அற்ற நிலையில் மக்கள் உள்ளமை தெரயவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2012ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலின் படி 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டை அற்ற நிலையில் உள்ளமை தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எப்படியிருப்பினும், எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் நலன் கருதி தற்காலிக அடையாள அட்டையினை பெற முடியும் என ஆள்பதிவு திணைக்களம் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளது.

இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினம்! லண்டனில் ஆர்ப்பாடடம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 08:48.13 PM GMT ]
1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இவ் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வு எதிர்வரும் ஜூலை மாதம் 23ம் திகதி பிற்பகல் 4 மணியிலிருந்து 7 மணிவரை, பிரித்தானிய பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ வதிவிடமான 10 Downing street முன்பாக பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் கார்த்திகை மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் இளவரசர் சாள்ஸ் ஆகியோர் கலந்துகொள்வதற்கெதிராக அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இலங்கையில் தமிழர் தாயக பகுதிகளில் திட்டமிட்ட இனவழிப்பு, இராணுவமயப்படுத்தல், பௌத்தமயப்படுத்தல் மற்றும் காணி அபகரிப்பு போன்றவை சிங்கள இனவாத அரசினால் துரித கதியில் தொடரப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அதனைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இவ் ஆர்ப்பாட்ட நிகழ்வு நடைபெறும். 

எமது மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு நாம் ஓயாது தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருத்தல் காலத்தின் கட்டாயம். இவ் விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே பிரித்தானிய தமிழர் பேரவை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது . 

எங்கள் மக்களின் வலிகளை பதிவு செய்யும் இவ்நிகழ்வில் அனைத்து புலம் பெயர் வாழ் உறவுகளையும் கலந்து கொண்டு உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துமாறு பிரித்தானியத் தமிழர் பேரவை வேண்டிக் கொள்கிறது.


Geen opmerkingen:

Een reactie posten