கூட்டமைப்பின் இந்த நடவடிக்கையானது விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், மீண்டும் உயிர்த்தெழுந்தது போன்றது என தெரிவித்துள்ள அமைச்சர், இதன் மூலம் கூட்டமைப்பு இரண்டு விடயங்களை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் சட்டரீதியான மோதலுக்கு சென்று, ஈழத்தை பெற்றுக்கொள்ளவும், ஈழத்தை பெறும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்வது ஆகியனவே இந்த இரண்டு விடயங்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடமாகாண சபையைக் கட்டுப்படுத்தும் ஆளுனரின் அதிகாரங்களைக் குறைக்கவேண்டும் என்று, முதலமைச்சர் வேட்ப்பாளர் சீ.வி.விக்னேஸ்வரனை தெரிவித்துள்ளார். இதில் நாம் ஒரு விடையத்தை நன்கு புரிந்துகொள்ளவேண்டும். அமெரிக்கா தொடக்கம் பல மேற்குலக நாடுகள் 13 வது திருத்தச்சட்டமே தமிழர்களுக்கு ஒரு தீர்வு என்று கருதுகிறது. மாகாண சபை முறைமையை அவர்கள் தீர்வு என்று கருதுகிறார்கள். ஆனால் தற்போது நடைபெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலும், அதன்பின்னர் உருவாக்கப்படவிருக்கும் அமைச்சரவையும், தமிழர்களுக்கு எந்த ஒரு தீர்வையும் பெற்றுத்தரப்போவது இல்லை என்பது விரைவில் தெரியவரும். அத்தோடு ஏதாவது ஒரு காரணத்திற்காக, மகிந்த வடமாகாணசபையைக் கலைப்பாரேயானார், இதனால் நாம் உலக நாடுகளுக்கு ஒரு விடையத்தை எடுத்துக்கூற முடியும். அது என்னவென்றால் மாகாணசபை முறைமை என்பது தமிழர்களின் தீர்வு அல்ல என்னபது தான் அது !
Geen opmerkingen:
Een reactie posten