தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 juli 2013

ரஸ்யா, சீனா, ஈரான் பாணியில் சிறிலங்கா இராணுவம் !

சிறிலங்கா இராணுவத்தின் எல்லா பற்றாலியன்களுக்கும் முழுமையான, நவீன வசதிகளுடன் கூடிய முகாம்களை அமைப்பதற்கான நிலம் தனியாரிடம் இருந்தாலும் சுவீகரிக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் ஒவ்வொரு பற்றாலியன்களுக்கும், முழுமையாக நவீன வசதிகள் கொண்ட முகாம்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த முகாம்களை அமைக்கும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அனுமதி அளித்துள்ளார். அதற்காக தெரிவு செய்யப்பட்ட காணிகள், தனியாரிடம் இருந்தாலும் கூட, அரசாங்கம் அவற்றைச் சுவீகரித்து, இராணுவத்திடம் ஒப்படைக்கும். எல்லா முகாம்களும் முன் தயாரிப்புக் கட்டடங்களை கொண்டதாக இருக்கும்.

இலாபமீட்டும் வர்த்தக முயற்சிகளில், ஈடுபடும் அமைப்பு ஒன்றை இராணுவம் உருவாக்குவதற்கு, அமைச்சரவை அனுமதிக்காக காத்திருக்கிறது. இதன் மூலம் இலாபமீட்டும் திட்டங்களில் ஈடுபட முடியும். முக்கியமான அரசாங்க திட்டங்களைக் கூட மேற்கொள்ள முடியும். சிறிலங்கா இராணுவத்திடம் அதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்ட எல்லா வளங்களும் உள்ளன. ரஸ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகளில் இராணுவம் மூலோபாயத் திட்டங்களில் முக்கியமாக கவனம் செலுத்துகின்றன.

அந்த நாடுகளில் தேசிய பாதுகாப்பு நலன்களை பாதுகாக்கவும், பலத்தை அதிகரிக்கவும், பெருமளவிலான நிறுவனங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten