தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 juli 2013

பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால், தமிழ்த் தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சிக்கப்படும்!: பசில்!

சர்வதேச ஊடகங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில்: பீரிஸ்
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 04:53.06 AM GMT ]
சர்வதேச ஊடகங்கள் பல தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொதுநலவவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே பின்னணியில் உள்ளனர். அவர்களால் சர்வதேச ரீதியாக பல ஊடங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
அந்த ஊடங்களும் இலங்கைக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எனினும் இவற்றுக்கு மத்தியிலும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதாக அனைத்து பொதுநலவாய நாடுகளின் உறுப்பு நாடுகளும் உறுதியளித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால், தமிழ்த் தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சிக்கப்படும்!: பசில்
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 05:40.31 AM GMT ]
வட மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தமிழ்த் தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சிக்கப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் �தி ஹிந்து� பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண பொலிஸ் அதிகாரங்களின் அடிப்படையில் தனியான இராணுவ அலகுகளை உருவாக்க எவ்வித சாத்தியமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். 
இலங்கையில் மாகாண இராணுவ அதிகாரங்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் குறிப்பிட்டார்.
1988ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சித்ததாக பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கிற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் மீளவும் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்படாது என்பதனை தின்னமாக குறிப்பிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே மாகாணசபைகளுக்கு முழு அளவில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten