தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 4 juli 2013

போர் தவிர்ப்பு வலயம் (No Fire Zone) ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட கெலம் மக்ரே உள்பட நால்வர் கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாமாஸ்மீ சடலமாக மீட்பு
[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 02:33.18 AM GMT ]
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாமாஸ்மீ சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற பாரியளவிலான குற்றச் செயல்களுடன் இந்த மாமாஸ்மீக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை குறித்த நபரின் சடலத்தை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்திற்கு அருகாமையில் இந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சடலத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களை தென்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போர் தவிர்ப்பு வலயம் (No Fire Zone) ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட கெலம் மக்ரே உள்பட நால்வர் கைது
[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 07:48.14 AM GMT ]
இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றிய சர்ச்சைக்குரிய “போர் தவிர்ப்பு வலயம்”  என்ற ஆவணப்படத்தை அனுமதி இன்றி பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டியதற்காக மூவர் மலேசியாவில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
பொதுஇடம் ஒன்றில் படத்தைத் திரையிட்ட 10 நிமிடங்களில் உள்துறை மற்றும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் 30 பேர் சென்று படத்தையும் படத்தைத் திரையிட உதவிய கணினியையும் பறிமுதல் செய்ய முற்பட்டனர்.
ஏற்பாட்டாளர்கள் பேச்சு நடத்தியதை அடுத்து படத்தைத் திரையிட அனுமதித்த அவர்கள், பின்னர் ஏற்பாட்டாளர்களில் மூவரை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி நாள்களில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களை அப்பட்டமாக சித்திரிக்கும் இந்த ஆவணப்படம் உலகெங்கும் திரையிடப்பட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதைத் தயாரித்த குழுவினரின் பெயர்கள் 2012 நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் சர்ச்சைக்குரிய இலங்கை இறுதிப் போர் காணொளி ஆவணப்படமான யுத்தசூனிய வலயம்: இலங்கை கொலைக்களங்கள் ஆவணப்படத்தை திரையிட்ட ஏற்பாட்டாளர்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய உள்விவகார மற்றும் வெளிநாட்டு அமைச்சுக்கள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
இலங்கையின் கொலைக்களம் - மலேசியாவில் திரையிட்ட கெலம் மக்ரே உள்பட நால்வர் கைது 
கோலாலம்பூர்: ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை அரசு அரங்கேற்றிய இனப்படுகொலை குறித்த சனல் 4-ன் ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட அதன் இயக்குனர் கெலம் மக்ரே உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
வட இலங்கையில் ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் சிங்கள இராணுவத்தால் லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், விடுதலைப் புலிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
மனித இனத்துக்கு எதிரான கொடுமையான இரசாயன ஆயுதங்களை பிரயோகித்து இந்த இனப்படுகொலையை அரங்கேற்றினர். சாட்சியில்லா இனப்படுகொலை என நினைத்துக் கொண்டிருந்த இலங்கை அரசுக்கு பெரும் பீதியைக் கொடுத்தது சனல் 4-ன் இந்த ஆவணப்படம்.
இரண்டு பகுதிகளாக வெளியான இந்த ஆவணப்படம் தான், ஈழத்தில் மனித உரிமைக்கு எதிராக நடந்தேறிய அத்தனை கொடுமைகளையும் உலகுக்கு அம்பலப்படுத்தியது.
இந்தப் படம் இந்தியாவில் தலைநகர் டெல்லியில் திரையிடப்பட்டது. அடுத்து மலேசியாவில் திரையிட முயன்றனர். கோலாலம்பூரில் உள்ள சைனிஸ் அசம்பலி ஹோலில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.
ஆவணப்படத்தை காட்சிப்படுத்தும் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்த மூன்று ஏற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆவணப்படம் திரையிடப்படுவதற்கு இலங்கை தூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் போலியானவை எனவும், இலங்கையின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கம் கொண்டது என்றும் ஆட்சேபித்ததால், மலேசிய அரசு கெலம் மக்ரே உள்ளிட்ட நால்வரை கைது செய்துள்ளது. 

Geen opmerkingen:

Een reactie posten