தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 juli 2013

பஸ்சில் துண்டைப்போட்டு இடம் பிடிப்பதுபோல இராணுவம் பிடிக்கும் நிலம் ! !



ஊரில் பஸ்சில் பயணிக்கு உள்ளவர்கள், முண்டியடித்து ஏறி இடத்தைப் பிடிப்பது வழக்கம். அதிலும் சிலர் தமது துணியைப் போட்டு இடத்தை பிடித்து அந்த இடம் தமது என்பார்கள். இந்தப் பாணியில் தான் இலங்கை இராணுவமும் தமிழர் பகுதிகளை பிடித்து வருகிறது. வெறுங்காணி ஒன்று இருந்தால் போதும். உடனே இராணுவத்தினர் மரப் பலகை ஒன்றை அங்கே நட்டு "இது இராணுவத்தின் காணி" என்று எழுதிவிடுகிறார்கள். கடந்த பல வருடங்களாக , புலிகளின் பிடியில் இருந்த மன்னாரில், திடீரென இராணுவத்துக்கு சொந்தமான காணிகள் எப்படி முளைத்தது ?

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, மன்னார் சௌத்பார் பிரதான வீதி மற்றும் பனை மரக்காடுகள், அடர்ந்த காடுகளிலேயே காணி ஒதுக்கீடுகள் இடம் பெற்றுள்ளன. அதிகளவான தனியார் காணிகளும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. கடந்த போர் காலத்தில் அதுவும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் இருந்து பல ஆயிரக்கணக்காண தமிழ், முஸ்ஸிம் குடும்பங்கள் அகதிகளாக இந்தியாவுக்கும் ஏனைய இடங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்றிருந்தன. அவர்களின் காணிகளையே தற்போது இலங்கை இராணுவம் அபகரித்து வருகிறது. 

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தனியார், மற்றும் அரச காணிகள் இராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களும் அரசியல் வாதிகளும் விசனம் தெரிவித்துள்ளனர்.


Geen opmerkingen:

Een reactie posten