தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 juli 2013

பைபர் கிளாஸ் வள்ளங்களின் தமிழகம் சென்றது புலிகளா ? இருவர் கைது !

இரண்டு ஈழத் தமிழ் இளைஞர்கள் ராமேஸ்வரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. குறித்த இருவரும் பைபர் கிளாஸ் படகில் ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள அக்னிதீர்த்தம் பகுதிக்குள் சென்றுள்ளார்கள். இவர்கள் தம்மை மீனவர்கள் என்று இந்தியக் கடற்படைக்கு அடையாளம் காட்டியுள்ளார்கள். இருப்பினும் அவர்கள் பயணித்த படகை வைத்து, அவர்கள் இந்திய மீனவர்கள் அல்ல எனத் தெரிந்துகொண்ட கடற்படையினர், அவர்களை விசாரித்துள்ளார்கள்.

புஸ்பகுமார் மற்றும் வருணகுலசேகர் என்று அழைக்கப்படும் இவ்விருவரையும், கைதுசெய்ய இந்தியக் கடற்படையினர் அவர்களை ராமேஸ்வரம் , பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இவ்விருவரும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள். தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்து உள்ளார்கள். சரணடைந்த புலிகள் உறுப்பினர்கள் பலரை இலங்கை இராணுவம் தொடர்ந்து துன்புறுத்திவரும் நிலையில், அவர்கள் இந்தியா சென்றாவது நிம்மதியாக வாழலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் அவர்களை இந்திய பாதுகாப்பு பிரிவினரும் சும்மா விடுவது இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Geen opmerkingen:

Een reactie posten