தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 juli 2013

மஹிந்த, பிரபாகரனை போல செற்படுகிறார்: ரணில் !

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை போன்று செயற்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு பல்வேறு தேவைகள் உள்ள போதும் அதனை அரசாங்கம் கண்டுக் கொள்ளாமல் சுயநலத்துடன் செயற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விரைவாக பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட் வேண்டும்என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக மக்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை எந்த தருணத்திலும் தேர்தல் ஒன்றுக்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாகவும் எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவதன் ஊடாக தமது வெற்றி உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten