தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juli 2013

சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கல் அவசியம்! பிரித்தானிய தூதுக் குழுவிடம் மாவை தெரிவிப்பு!

சட்ட விரோத ஆஸி படகு பயணங்கள்! 1500க்கு அதிகமானோர் இதுவரை கடலில் மூழ்கி உயிரிழப்பு
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 12:00.29 AM GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் சென்றவர்களில் இதுவரை 1500 ற்கும் அதிகமானவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
2000ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலேயே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
2000ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 746 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இவர்களில் 363 பேர் கடலில் மூழ்கியிருப்பதுடன் 350 பேர் தொடர்ந்து காணாமல் போனவர்களின் விபரங்களில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 22 பேர் தடுப்பு முகாம்களில் உயிரிழந்திருப்பதுடன் 11 பேர் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய பின்னர் கொல்லப்பட்டிருப்பதாக அச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
2008ம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு ஜுலை வரையான காலப் பகுதியில் தொழிற் கட்சியின் ஆட்சிக் காலத்தில் 877 சட்ட விரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்வுயிரிழப்புக்களில் 15 உயிரிழப்புக்கள் தற்கொலையால் இடம்பெற்றவையென வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
862 பேர் சட்டவிரோதமான படகுப் பயணம் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்டு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகை காணப்படுவதாக செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
இருந்தபோதும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சரியான முறையில் கணிப்பிடப்படவில்லை.
அவ்வாறு கணிப்பிடப்பட்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கல் அவசியம்! பிரித்தானிய தூதுக் குழுவிடம் மாவை தெரிவிப்பு
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 12:20.37 AM GMT ]
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கல் முறைமையே தமக்கு அவசியம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற தூதுக் குழுவினரை, கிளிநொச்சியில் சந்தித்து உரையாற்றிய போதே, தமிழ்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
13 வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழ் பரிபூரணமான அதிகார பரவலாக்கலுக்கு இணங்கம் உள்ளதா என்று பிரித்தானிய பிரதிநிதிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அந்த அதிகார பரவலாக்கல், வடக்கு கிழக்கில் நிலவும் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வாக அமையாது என்று குறிப்பிட்டார்.
இது தவிரவும், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் அடிப்படையிலேயே, சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கலை தமது கட்சி கோருவதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ முற்றுகைக்குள் நீதியானதும், சுதந்திரமானதுமான வடக்கு தேர்தல் சாத்தியமற்றது என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு- மாவை சேனாதிராசா
வடக்கு மாகாணசபை தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடைபெறுமா என்பதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சந்தேகத்துடனேயே இருப்பதாக, ஜரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, முழுமையான இராணுவ முற்றுகைக்குள் நீதியான தேர்தல் சாத்தியமற்றது.
இதற்காகவே சர்வதேச கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுதியாக இருப்பதாகவும், இலங்கையில் தேர்தல்கள் ஆணையகம், நீதித்துறை, காவற்றுறை, போன்றனவும் ஜனாதிபதியின் அதிகாரத்திற்குட்டு சுதந்திரமாக இயங்க முடியாத நிலையிலிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் அலமென்டை தலைமையிலான ஜரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து, கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துப் பேசியிருந்தது.
இந்தச் சந்திப்பு காலை 9மணி தொடக்கம் 10மணிவரையில் நடைபெற்றது.  சந்திப்பு குறித்து பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சினைகள் குறித்து மிகவும் தெளிவான முறையில் நாம் கூறியிருக்கின்றோம். தமிழர்கள் 13ம் திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் ஜக்கிய இலங்கைக்குள் பூரணமான சமஷ்டி ஆட்சி ஒன்றினையே எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள், தமிழ் மக்களுக்கு உரித்தான சுயநிர்ணய அடிப்படையில் அவ்வாறான அரசியல் தீர்வினை தமிழர்களுக்கு வழங்கும் எண்ணம் இந்த அரசிற்கு கிடையாது.
13ம் திருத்தச் சட்டம் என்பது தமிழர் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வாக அமையப்போவதில்லை. ஏற்கனவே 13ம் திருத்தச் சட்டத் திலுள்ள அதிகாரங்கள் முழுவதையும் பறித்துவிட்டு,
இப்போது மீதமாகவுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களையும் நீக்குவதற்கான சட்டமூலத்தைப் பாராளுமன்றில் நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. வடகிழக்கு தமிழர் தாயகத்தில் தம்மைத்தாம் ஆழும் வகையிலான தீர்n வான்றினை வழங்கவேண்டும்.
இதேபோன்று வடகிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தை இராணுவ மயமாக்கி அதன் மூலம் சிங்கள, பௌத்த மயப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் மிகவும் உறுதிப்பாட்டுடன் இருக்கின்றது. அதற்காகவே தமிழ் மக்களுடைய நிலங்களை பொதுத் தேவை என்ற போர்வையில் இராணுவத் தேவைகளுக்காக அபகரிக்கவும், எங்கள் பாரம்பரியங்களையும், இனத்துவ அடையாளங்களையும் சிதைக்கவும் கூட அரசாங்கம் தீ விர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் முற்று முழுதான இராணுவ முற்று கைக்குள் வடக்கு மாகாணசபை தேர்தல் நீதியான முறையில் நடைபெறுமா என்பதில் கூட்டமைப்பு சந்தேகத்துடனேயே இருக்கின்றது.
17ம் திருத்தச் சட்டத்திலிருந்த அதிகாரங்கள் முழுவதும், 18ம் திருத்தச் சட்டத்தின் மூலம் பறிக்கப்பட்ட நிலையில் தேர்தல்கள் ஆணையம், நீதித்துறை, காவல்துறை போன்றன ஜனாதிபதியின் அதிகாரத்திற்குட்பட்டு சுதந்திரமாக இயங்க முடியாத நிலையிலிருக்கின்றன.
இந்நிலையில் சுதந்தி ரமான தேர்தல் வடக்கில் நடைபெறாது. குறித்த சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன், ஈ.சரவணபவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten