தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juli 2013

யாழில் 13 படைமுகாம்களுக்கு மூடுவிழா! காணிகளும் மீளளிக்க ஏற்பாடு!: கட்டளைத் தளபதி - கள்ள நோட்டுக்களை அச்சிட்டவர் கைது

கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீது தாக்குதல் நடத்திய நாள் இன்று!
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 08:29.41 AM GMT ]
கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப் புலிகளின் 14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.
கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான கரும்புலித்  தாக்குதலை தலைமையேற்று நடத்தியவர் விடுதலைப் புலிகளின் திட்டமிடல் தளபதி கேணல் சாள்ஸ் அவர்கள்.

யாழில் 13 படைமுகாம்களுக்கு மூடுவிழா! காணிகளும் மீளளிக்க ஏற்பாடு!: கட்டளைத் தளபதி - கள்ள நோட்டுக்களை அச்சிட்டவர் கைது
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 05:19.34 AM GMT ]
யாழ். மாவட்டத்தில் உள்ள 13 இராணுவ முகாம்கள் இந்த வாரம் மூடப்படவுள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் வெளியேறிய முகாம் அமைந்திருந்த காணிகளின் உறுதிப்பத்திரங்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மாதமளவில் காணி அமைச்சு உரிய காணி உரிமையாளர்ளுக்கு இந்த ஆவணங்களை வழங்கும் பணிகளை ஆரம்பிக்கும் என யாழ். கட்டளைத் தளபதி  தெரிவித்துள்ளார்.
காணி உரிமையாளர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த 16 முகாம்களில், 13 முகாம்களிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளதாகக் கட்டளைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
யாழில் கள்ள நோட்டுக்களை அச்சிட்டவர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது
யாழில் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு வெளியீடு செய்த அச்சக உரிமையாளர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ் ஆறுகால்மடத்தடியில் போலியான முறையில் கள்ள நோட்டுக்கள் அச்சட்ட அச்சக உரிமையாளர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இருந்து வந்த குற்றப்புலனாய்வுப் பொலிசார் இவரை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இவர் தனது அச்சகத்தில் கள்ள நோட்டுக்களை அச்சிடுவதற்காக பல இயந்திரங்களை தென்பகுதியிலிருந்து கொண்டு வந்துள்ளதாகவும் அத்தோடு போலி ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டதாக தெரியவருகின்றது.
இந்த போலி ரூபா நோட்டுக்கள் அச்சிட்ட அச்சக உரிமையாளருக்கும், யாழ் செயலகத்தில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரியும் அவனது நண்பனும் தொடர்புபட்டிருப்பதாகவும் இருவரும் சேர்ந்தே இந்த நடவடிக்கைகளை மேற் கொண்டனர் என்றும் தெரியவருகின்றது.
வங்கி ஊழியரின் உதவியுடன் இவர் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு வெளியீடு செய்து வந்துள்ளதாகவும் தகவல் கிடைத்திருப்பதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten