மொறட்டுவை இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ஒரு பகுதி உடைப்பு: அதிர்ச்சியில் மக்கள் - தாவடியில் ஐயப்பன் சுவாமிக்கு புதிய ஆலயம்
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 08:28.33 AM GMT ]
...அவ் ஆலயத்தின் பின் பகுதி தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தரவுக்கு அமைய, உடைக்கப்பட்டமை அப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகின்றதாக ஜனநாயக மக்கள் முன்னணியில் உப பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண்.குகவரதன் கூறியுள்ளார்.
கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டமைக்கு, கருணாநிதியே காரணம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தமக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளை திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இன்று கௌரவ தலைவர் மனோகணேசனின் உத்தரவுக்கு அமைய குறிப்பிட்ட ஆலயத்தை பார்வையிடுவதற்காக ஸ்தலத்திற்கு நானும் பாஸ்கராவும் விஜயம் மேற்கொண்டோம்.
இவ்வாறான இனவாதத்தை, மத வாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்குமேயானால் மதங்களின் சாபத்திற்கு உள்ளாக நேரிடும் என்றும் அவர் கூறினார்.
இக் கோயிலின் பிற்பகுதி உடைப்பதற்கு காரணமாக இருந்தவர்களை இனங்கண்டு, உடனடியாக அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதோடு, அப் பகுதியில் வாழ்கின்ற மக்களின் அமைதியையும் இறை வழிபாட்டையும் கருத்திற் கொண்டு பொறுப்பான அதிகாரிகள் இக்கோயிலுக்குரிய இடத்தை வழங்க வேண்டும்.
ஆலயங்கள், பள்ளிகள், தேவாலயங்கள் மீதான இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். மதங்களுக்கிடையில் அத்துமீறிய செயற்பாடுகளைச் செய்யும் அரசாங்கத்திற்கு எனிவரும் தேர்தல்களில் தமிழ் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் சண். குகவரதன் கேட்டுள்ளார்.
தாவடியில் ஐயப்பன் சுவாமிக்கு புதிய ஆலயம்
தாவடியில் வீதி அகலிப்பின் போது இடித்து அகற்றப்பட்ட ஐயப்பன் சுவாமி கோயில் மீண்டும் புதிதாக கட்டப்படவுள்ளது.
இதன் புனர்நிர்மாண பணிகளுக்காக ஒரு இலட்சம் ரூபாவை வீதி அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியுள்ளது.
வீதிக்கரையோரமாக வாய்க்காலுக்கு மேலாக இக்கோயிலைக் நிர்மாணிக்க இணக்கம் ஏற்பட்டுள்ளது.
தாவடி காங்கேசன்துறை வீதியில் இவ் ஐயப்பன் கோயில் முன்னர் இருந்தபோது நிறைந்த அடியார்கள் ஐயப்பனை வழி பாடு செய்து வந்தனர். பூஜைகள், பஜனைகள், ஐயப்பன் தினத்திருவிழாக்கள், பொங்கல்கள் போன்றவை அடியவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. வீதியால் சென்ற பல பொது மக்களும் வாகனங்களில் இருந்து இறங்கி வழிபட்டுச் சென்றனர்.
வீதி அகலிப்பின் போது இக்கோயிலின் அருகில் காணப்பட்ட சிறிய மண்டபம், மணிக்கோபுரம் என்பன இடித்து அகற்றப்பட்டன. தற்போது எதிர்ப்பக்கமாக வீதிக் கரையோரத்தில் ஒரு சிறிய இடத்தில் ஐயப்பன் திருவுருவம் வைக்கப்பட்டுள்ளதோடு ஏனைய தெய்வப் பாவைகள் நிலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பூசகரும், வீதியோராமாக நின்றே பூஜைகள் செய்கின்றார். பக்தர்களின் மனது இதனால் பெரிதும் புண்பட்டுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த கருணாநிதி!
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 10:03.16 AM GMT ]
தற்போது அந்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடவும், மீண்டும் அரசியல் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவுமே கருணாநிதி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள கருணாநிதி, 1974ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட மறுநாள், அனைத்து கட்சிகளின் கூட்டம் ஒன்றை நடத்தி, இதற்கு எதிரான தீர்மானம் ஒன்றை கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த தீர்மானத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் கைச்சாத்திடவில்லை.
அதேதினத்தில் அந்த நாட்களில் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்திக்கு, கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் அதிருப்தி கடிதம் ஒன்றையும் தாம் எழுதியதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கச்சத்தீவு இலங்கைக்கு மாற்றப்பட்ட விடயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்ட சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:
Een reactie posten