தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 juli 2013

அவுஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேற படகில் வருபவர்களுக்கு அனுமதியில்லை: அவுஸ்.பிரதமர் - இலங்கை அரசு வரவேற்பு

பொதுநலவாய தலைமை பதவிக்காக தேசிய பிரச்சினையை பணயம் வைத்துள்ளார் மகிந்த: ஜே.வி.பி
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 10:13.51 AM GMT ]
இந்தியா உதவி செய்த காரணத்தினாலேயே இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதனால் அரசாங்கம் இலங்கையின் தேசியப் பிரச்சினையை பணயம் வைத்துள்ளது என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற ஜே.வி.பியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மாகாண சபைகள் தொடர்பில் விவாதிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுநலவாய நாடுகள் இலங்கையில் நடைபெறாது போனால், இலங்கைக்கு அதன் தலைமைத்துவப் பதவி கிடைக்காது. இதனால் தலைமைத்துவ பதவியை பெற மகிந்த நாட்டின் தேசியப் பிரச்சினையை பணயம் வைத்துள்ளார் என்றார்.
இங்கு பேசிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா,
மாகாண சபைகளின் அதிகாரங்களை நீக்க வேண்டும் என்று கூறியவர்களை தற்பொழுது தேடிக் கொள்ளவும் முடியாதுள்ளது. அவர்களின் வாய்கள் மூடப்பட்டு விட்டன. பசில், சென்றார். மேனன் வந்தார் நிலைமை மாறியது.
அன்று போல் இன்றும் அரசாங்கம், இந்தியாவின் தாளத்திற்கு ஏற்ப அடியை வைத்து ஆடுகிறது. 1987 ஆம் ஆண்டு அப்படியே நடந்தது. இன்றும் அப்படியே நடக்கிறது.
மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்ற முடிவை, அரசாங்கம் ஆறு மாதங்களுக்கு முன்னர் எடுத்தது. தேர்தலுக்கு பின்னர், பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்குவது என்பது இலகுவான காரியமல்ல.
அவ்வாறு நீக்கினால், இன்றுள்ள நிலைமையை விட பாரதூரமான நிலைமை ஏற்படும். 13வது திருத்தத்தின்படி வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்கு தான் மக்களின் ஆணை கிடைக்கும்.
தேர்தல் நடந்த பின்னர், அதிகாரங்களை நீக்குவது மக்கள் ஆணையை தரம் தாழ்த்தும் நடவடிக்கையாகும். இது தற்போதைய நிலைமையை விட பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
இங்கு பேசிய ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க,
தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் பிரயோசனமான வேலையை செய்ய அரசாங்கம் முயற்சிக்கவில்லை. வீணாக மக்களை தூண்டி வருகிறது. மக்களுக்கு ஒன்றை கூறுகிறது. இந்தியாவுக்கு மற்றுமொன்றை கூறுகிறது. பிரிவினைவாதிகளுக்கு வேறொன்றை கூறுகிறது.
மாறி, மாறி இவர்களை சமாளிக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. வெறும் கதை மட்டும்தான் எதுவும் நடைபெற போவதில்லை என்றார்.

அவுஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேற படகில் வருபவர்களுக்கு அனுமதியில்லை: அவுஸ்.பிரதமர் - இலங்கை அரசு வரவேற்பு
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 10:52.15 AM GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் சென்று அரசியல் தஞ்சம் கோருவார் நீண்டகாலம் அங்கு தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி வருபவர்கள் பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் உண்மையில் அகதி அந்தஸ்தை கோருவேரே அங்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது, ஏனையோர் திரும்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்க்கப்படும் நிலையில், பிரதமரின் இந்த அகதிகள் தொடர்பான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இனிமேல் எவர் படகுகளில் வந்து அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரினாலும் அவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. தொடர்ந்தும் வருபவர்கள், பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் இது தொடர்பாக அந்த நாட்டின் உடன்பாடு ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ளது.
ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு, மக்கள் அவுஸ்திரேலியாவிற்கு வருவதை தடுப்பதே இதன் நோக்கமாகும்.
அவுஸ்திரேலியாவில் போதுமான மக்கள் இருக்கின்றனர். அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து செல்வதாக கூறி, ஆட்கடத்தில் ஈடுபடுபபவர்கள், மக்களை ஆழ் கடலில் மூழ்கடித்து வருகிறனர்.
அவுஸ்திரேலியாவுக்கு உறுதியான எல்லை பாதுகாப்பு படை உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவின் அறிவிப்பை இலங்கை வரவேற்றுள்ளது
படகுகள் மூலம் நாட்டுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகளை இனிமேல் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர்களை பப்புவா நியுகினிக்கு அனுப்பப்போவதாக அவுஸ்திரேலியா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பை, இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கும் பப்புவா நியுகினிக்கும் இடையில் இது தொடர்பாக உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்பின்னர் தகவல் வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட், சட்டரீதியற்ற அகதிகள் நேரடியாகவே பப்புவா நியுகினிக்கு அனுப்பப்படுவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அகதிகளாக இனங்காணப்படுவோர் அந்த நாட்டிலேயே குடியமர்த்தப்படுவர் என்றும் ரட் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி-

Geen opmerkingen:

Een reactie posten