[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 11:23.38 AM GMT ]
ஜும்மா தொழுகையை நடத்த வேண்டாம் எனவும் தொழுகை நடத்தப்பட்டால் பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பள்ளிவாசல் நிர்வாக சபை இன்று மதியம் ஜூம்மா தொழுகையை நடத்தவில்லை என தெரியவருகிறது.
பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த தகவலை கூறியதாக பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து முஸ்லிம்கள் அருகிலுள்ள பங்கரம்மன பள்ளிவாசலுக்கு சென்று ஜும்மா தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் சிலர் வர்த்தக நிலையங்களுக்குள் தமது தொழுகையை முடித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பொதுபல சேனைவின் கூட்டம் அடுத்த மாதம் மஹியங்கனையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு குறித்த பள்ளிவாசல் தாக்கப்பட்டு, பள்ளிவாசலினுள் பன்றி இறைச்சி வீசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் தெரிவு குறித்து கூட்டமைப்பு இந்தியாவிற்கு விளக்கம்
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 09:52.13 AM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூதரக பிரதிநிதி வி. மகாலிங்கத்திற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று நடந்துள்ளது.
சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் வெளியிடப்படாத போதிலும், வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் இந்திய தூதரக பிரதிநிதிக்கு விளக்கப்பட்டதாக தெரியவருகிறது.
எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் வழமையக நடைபெறும் சந்திப்பின் ஒரு பகுதியாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய தூதரக பிரதிநிதி மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten