தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 juli 2013

முப்பது வருட யுத்தத்தில் இலங்கையின் அனைத்து மாகாணங்களும் பாதிக்கப்பட்டன: யாழில் அமைச்சர் சுசில் பிறேமஜயந்த!

தகாத உறவு வைத்திருந்த முஸ்லிம் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டிய கிராம மக்கள்
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 12:39.47 PM GMT ]
தகாத உறவை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தி, கல்கமுவ பிரதேசத்தில் முஸ்லிம் பெண்ணொருவரின் தலைமுடியை கிராம மக்கள் வெட்டியுள்ளதாக தெரியவருகிறது.
குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ மொன்னக்குளம் அல்- அஸ்னா ஜூம்மா பள்ளிவாசலில் வைத்து இந்த பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டுள்ளது. இதன் போது தலையில் காயமடைந்த நிலையில் அந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தான் தமிழ் இளைஞர் ஒருவரை காதலிப்பதாகவும் இதனை குடும்பத்தினர் எதிர்த்து வருவதாகவும் காதலரை பார்த்து விட்டு, திரும்பி கொண்டிருந்த போது தன்னை ஏமாற்றி பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று தலைமுடியை துண்டித்துடன் கைகளை கட்டி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பெண்கள் கைதுசெய்யப்பட்டு, இன்று கல்கமுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை கடுமையாக எச்சரித்த நீதவான் ஜயதிலக்க தென்னகோன், கடும் நிபந்தனைகளை விதித்து பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
40 வயதான இந்த பெண், இளைஞர் ஒருவருடன் தகாத உறவுகளை வைத்திருந்ததாகவும் பல முறை எச்சரித்தும் அவர் கேட்காததால், இந்த தண்டனை வழங்கப்பட்டதாகவும் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் ஷரியா சட்டம் இலங்கையில் அடிப்படைச் சடத்தில் உள்ளக்கப்படவில்லை என்பதால், பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை தவறான செயல் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முப்பது வருட யுத்தத்தில் இலங்கையின் அனைத்து மாகாணங்களும் பாதிக்கப்பட்டன: யாழில் அமைச்சர் சுசில் பிறேமஜயந்த
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 11:39.12 AM GMT ]
பெற்றொலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிறேமஜயந்த யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக யாழ்.மாவட்ட சுதந்திரக் கட்சியின் கிளை அறிவித்துள்ளது.
யாழிற்கு விஜயம் செய்யும் அமைச்சர், வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஆதவாளர்களையும் சந்திக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது.
முப்பது வருட யுத்தத்தில் இலங்கையின் அனைத்து மாகாணங்களும் பாதிக்கப்பட்டன - சுசில் பிறேமஜயந்த
30 வருட கால யுத்தத்தில் வடக்கு மாகாணம் மட்டும் பாதிக்கப்படவில்லை இலங்கையின் அனைத்து மாகாணங்களுமே பாதிக்கப்படுள்ளது என அமைச்சர் சுசில் பிறேமஜயந்த கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் சுசில் பிறேமஜயந்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் மாகாண சபை தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
30 வருட கால யுத்தத்தில் வடக்கு மாகாணம் மட்டும் பாதிக்கப்படவில்லை இலங்கையின் கிழக்கு, தெற்கு, மலையகம் என அனைத்து மாகாணங்களுமே பாதிக்கப்படுள்ளது. இதனால் அபிவிருத்திப் பணிகளைக் கூட செய்ய முடியாது இருந்தது. எதிர்வரும் காலங்களில் கடந்த காலங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்காது எதிர்காலத்தை நோக்கிச் செல்வோம்.
2006ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாணத்திற்கு வரும் போது வீதிகளின் ஒவ்வொரு 500 மீற்றர் தூரத்திலும் சோதனைச் சாவடிகள் போடப்பட்டிருந்தன ஆனால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்த நிலை மாற்றமடைந்து மக்கள் சமாதானத்துடனும் அபிவிருத்தியுடனும் வாழ்ந்து வருகின்றனர்.
மாகாண சபை அதிகாரங்கள் வடக்கிற்கு இல்லாது விட்டாலும் ஏனைய மாகாணங்களை விட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கு அதிக முக்கியம் கொடுத்து ஜனாதிபதி அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பார்.
அத்துடன் ஜனாதிபதி இன, மத, பேதம் இன்றி செயற்பட்டுக் கொண்டு வருகின்றார் எனவே அவருக்கு ஆதரவளித்து தேர்தல்களில் வெற்றிப்பெற செய்ய வேண்டும். இதற்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்தவர்கள் இவ்வாறான தேர்தலை நடத்த முன்வரவில்லை ஆனால் மகிந்த ராஜபக்ச அவர்கள் முன்வந்துள்ளார்.
அதன்படி இந்த மாகாண சபைத்தேர்தலில் வடக்கில் 19 பேர் போட்டியிட உள்ளனர். நாம் தேர்தலை நடத்துவது தோற்றுப் போக அல்ல. நீதிக்கு அடிபணிந்து வெற்றி பெற்று அபிவிருத்தியை முன்னெடுத்து மக்களின் வாழ்க்ககையினை ஒழிபெறச் செய்வதற்கே என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten