[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 01:39.29 AM GMT ]
இலங்கையின் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து இன்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தான் சந்தித்துப் பேசவுள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வட மாகாணத்தின் பல பிரதேசங்களுக்கு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின்போது முஸ்லிம் கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதால் ஐந்து இடங்களில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.
முஸ்லிம்கள் மட்டும் ஒரு அணியாக நிற்பதன் மூலம் வட மாகாண மக்களின் நலன்களை முன்னெடுக்க முடியும் என்று தாங்கள் நம்பவில்லை.
வட மாகாண சபைக்கான தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஆளும் கட்சியோடு இணைந்து போட்டியிடுவதே சிறந்த பலனளிக்கும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து போட்டியிடும் வேளையில், அச்சமூக மக்களின் வாக்குகள் சிதறும் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்துள்ளனர்.
எனினும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு வட மாகாணத்தில் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற்று மாகாண சபையில் இடங்களைப் பெறுவது முடியாத காரியம்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆளும் கட்சியோடு சேர்ந்து போட்டியிடுவதுதான் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தான் நம்புவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 01:55.10 AM GMT ]
எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டை புறக்கணிக்குமாறும் 13வது அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரியும் திராவிட முன்னேற்றக்கழகம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 8 ம் திகதியன்று இந்திய நாடாளுமன்றத்தின் முன்னால், திராவிட முன்னேற்றக்கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர்
நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
கடந்த 16 ஆம் திகதியன்று டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten