தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 juli 2013

குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்: கோத்தபாய சாடல்


வடமாகாண முஸ்லிம் மக்கள் தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?: நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 05:46.47 PM GMT ]
வடமாகாண முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக அறிவிக்க வேண்டுமென நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் குழுவொன்று இன்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுபினருமான மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பாக தெளிவாக அறிவிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
அதே போன்று வடமாகாண முஸ்லிம்களின் மீளக்குடியேற்றம், புனர்வாழ்வு, காணி விவகாரம் மற்றும் வாழ்வாதாரம் போன்றவைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பை நல்லாட்சிக்கான மக்கள் கோரியுள்ளது.
இது தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மானை தொடர்பு கொண்டு கேட்ட போது,
இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று சந்தித்தோம்.
இதன் போது எதிர்காலத்தில் வடமாகாணத்தினை ஆளப்போகின்ற கட்சியாக வரவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பாகவும் அங்குள்ள முஸ்லிம்களின் புனர்வாழ்வு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முஸ்லிம்களின் காணி போன்றவைகள் தொடர்பாக தெளிவாக அறிவிக்க வேண்டுமென கோரியுள்ளோம்.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடுவதாகவும் அந்த சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கித்தருவதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்ததாக அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் மற்றும் அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்: கோத்தபாய சாடல்
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 01:38.26 AM GMT ]
நகர அபிவிருத்தி தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
கொழும்பு அபிவிருத்தியில் சுரண்டுவதாக யாராவது கூறுவதாகவிருந்தால் பாராளுமன்றத்திலாவது அவர்களைப் பற்றி எடுத்துக் கூறலாம்.
நகர அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு கோடிக்கணக்கான ரூபாகளை ஏப்பமிடுபவர்கள் யார்? அப்படி யாராவது இருக்கிறார்களா? தெரிந்திருந்தால் பெயர்களை கூறாமலிருப்பது ஏன் என்று கோத்தாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.
அரசியல் இலாபம் கருதி கொழும்பு அபிவிருத்தியை வேகப்படுத்துவதனை பொறுக்க முடியாத எதிர்க் கட்சிகள் போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.
கொழும்பு அபிவிருத்திகள் ஒழுங்காகவும் முறையாகவும் திட்டமிட்ட முறையிலும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அதில் எந்த முறைகேடுகள் நடைபெறுவதற்கும் ஒப்பந்தக்காரர்களுக்கு பணச் சுரண்டல் செய்வதற்கும் இடம் வைக்கவில்லை.
கொழும்பு அபிவிருத்திக்கு பாதுகாப்பு படையினரிடமிருந்து கிடைக்கின்ற நேரடியான பங்களிப்பினால் பணம் சுரண்டுவதற்கு வழியேற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten